செவ்வாய், 20 ஜூன், 2017

சன் நெக்ஸ்ட் ஆப் 22 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளைத் தாண்டியது

சென்னை: அறிமுகம் செய்த ஒரே வாரத்தில் சன் நெக்ஸ்ட் ஆப் (Sun NXT App) 22 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளைத் தாண்டியுள்ளது. சன் குழுமம் தற்போது டிஜி்ட்டல் உலகில் ஆப் வடிவத்தில் காலடி பதித்துள்ளது. செலவு குறைவான கேபிள் டிவி இணைப்பையும் கடந்து DTH சேவைகள் பெருக காரணம், அதன் தரமான வீடியோக்களே. தரம் வாய்ந்த வீடியோக்களை காண தானே அனைவருக்கும் ஆர்வம். அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார் வரிசையில் தற்போது சன் குழுமமும் சன் நெக்ஸ்ட் மூலமாக இணைந்துள்ளது. அதன்படி அறிமுகம் செய்த ஒரே வாரத்தில் சன் நெக்ஸ்ட் ஆப் (Sun NXT App) 22 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக