வியாழன், 1 ஜூன், 2017

ராமேஸ்வரத்தில் 16 கிலோ தங்கம் பிடிபட்டது இலங்கையில் இருந்து கடத்தல் ... கூட்டாளிகளே தகவல் கொடுத்தனர் ..

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வருவதும், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில் இன்று ராமேஸ்வரம் அருகே உள்ள குந்துக்கால் கடற்கரை பகுதிக்கு, தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவான் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. எனவே, குந்துக்கால் பகுதியில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, 16 கிலோ தங்கத்துடன் இரண்டு நபர்கள் சிக்கியுள்ளனர். இலங்கையில் இருந்து இந்த தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பதாகவும், அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் வருவாய் புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே ரூ.6 கோடி மதிப்பிலான 16.32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இந்த தங்கம், ரகசியமாக படகில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக