வெள்ளி, 30 ஜூன், 2017

நடிகை பாவான கடத்தல் வழக்கு விசாரணை 12 மணித்தியாலங்கள் நடிகர் திலீப்பிடம் விசாரணை

கொச்சி: நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு
ஆளாக்கப்பட்ட வழக்கில், மலையாள நடிகர், திலீப் மற்றும் அவரது நண்பரிடம் போலீசார் நேற்று, 12 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினர்; இது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில், சித்திரம் பேசுதடி, தீபாவளி, வெயில் உள்ளிட்ட படங்களிலும், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ள நடிகை பாவனா, 31, காரில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார்.
பிப்ரவரியில் நடந்த இந்த சம்பவத்தால், அவர் மிகவும் மன உளைச்சல் அடைந்தார். இது குறித்து, கேரள மாநில போலீசார், மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், மலையாள நடிகர் திலீப் உடனான மோதல் போக்கால், பாவனா பழிவாங்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பரும், இயக்குனருமான நதிர்ஷாவிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். 12 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த விசாரணையின் போது, அவர்கள் இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டது.'தேவைப்பட்டால், அவர்கள் இருவரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்படும்; இந்த வழக்கு விசாரணை உரிய முறையில் நடத்தப்பட்டு, குற்ற வாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத் தரப்படும்' என, கேரள மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக