செவ்வாய், 6 ஜூன், 2017

எடப்பாடி அரசுக்கு மேலும் 11 எம் எல் ஏக்கள் போர்க்கொடி ... பெரும்பான்மை கேள்விகுறி?

சென்னை : டிடிவி தினகரனுக்கு அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 11
எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் முதல்வர் பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதிகாரப்போட்டியாக அதிமுக அம்மாஅணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என இரண்டாக பிரிந்தது அந்தக் கட்சி. ஓ.பிஎஸ், ஈபிஎஸ் என்று இரண்டு அணிகள் செயல்பட்டு வந்த நிலையில் கட்சி ஒன்றுபட தான் விலகுவதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்தார்.
ஆனால் சிறை சென்று விட்டு ஜாமினில் விடுதலையாகி சென்னை திரும்பிய தினகரனுக்கு மீண்டும் அதிகார ஆசை பிடித்துக் கொள்ள கட்சியில் தான் நீடிப்பதாக தெரிவித்தார். இதோடு 45 நாளில் தமிழகத்தில் கட்சி, ஆட்சியில் நடந்த விஷயங்கைளை சிறையில் உள்ள சித்தியிடம் சொல்லி முறையிடப் போயிருக்கிறார்.
11 எம்எல்ஏக்கள் போர்க்கொடி
இந்த கேப்பில் தமிழக அமைச்சர்கள் 19 பேர் தலைமைச்செயலகத்தில் திடீர் கூட்டம் போட்டு, தினகரனை விலக்கி வைத்த முடிவில் மாற்ற்ம இல்லை என்று தெரிவித்துவிட்டன. இதனால் எடப்பாடி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்களை வைத்து மட்டும் பெரும்பான்மையை நிரூபித்த எடப்பாடி அரசுக்கு இப்பாது 11 எம்எல்ஏக்களின் ஆதரவும் குறைந்தால் ஆட்சியை எளிதில் கவிழ்த்து விட முடியும். தமிழக சட்டப்பேரவையில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 234-க்கு 133 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. அதன்பின் 3 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற்றது. இதனால் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது. 136பேரில் பேரவைத் தலைவர் தனபால் தவிர, 135 எம்எல்ஏக்கள் அதிமுகவில் செயல்பட்டனர்.

இதில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால், எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 134 ஆக குறைந்தது. இவர்களில் 133 பேரின் ஆதரவுடன் தான், டிசம்பர் 5-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதன்பின், பிப்ரவரி 5-ம் தேதி ஓபிஎஸ் ராஜினாமா செய்த நிலையில், ஓபிஎஸ் உடன் சேர்த்து, 134 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக முயற்சித்தார் சசிகலா.

பிப்ரவரி 7-ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தலைமையை எதிர்க்க குழப்பம் ஆரம்பமானது. இதனையடுத்து அதிமுகவின் 11 எம்எல்ஏக்கள் ஒபிஎஸ் அணியில் தஞ்சம் அடைந்தனர். இறுதியாக பிப்ரவரி 18ம் தேதி எடப்பாடி அரசு 122 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவோடு ஆட்சிப் பெரும்பான்மையை நிரூபித்து அரசை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் 122 பேரில் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காவிடில் எடப்பாடி அரசை கவிழ்க்க இதையே காரணமாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக