புதன், 21 ஜூன், 2017

சர்வதேச யோகா தின கொண்டாட்டம் RSS கேசவ பலிராம் ஹெட்கேவர் நினைவுநாள்

இந்தியா முழுவதும் விவசாயம் அழிப்பு ! உத்திரப் பிரதேசத்தில் சர்வ தேச யோகா தினம் ஜூன், 2017
RRSs கேசவ பலிராம் ஹெட்கேவர் நினைவுநாள் (21 ஜூன் 1940) அவருக்கான நாளை சர்வதேச யோகா நாளாக அறிவித்துள்ளனர் இதுதான் உண்மை. எல்லாரும் விழுந்து கும்பிடுங்க
புதுடில்லி : 3வது சர்வதேச யோகா தினம் இந்தியா மட்டுமின்றி, உலகம்
யோகா தின கொண்டாட்டம் 10 அம்சங்கள் :
1. உ.பி.,யின் லக்னோவில் அம்பேத்கர் சபா திடலில் நடந்த சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கொட்டும் மழையில், சுமார் 50,000 பேருடன் இணைந்து பிரதமர் மோடி யோகா பயிற்சி மேற்கொண்டார். 2015 ம் ஆண்டு டில்லியிலும், 2016 ல் சண்டிகரிலும் நடந்த சர்வதேச யோகா தினத்தில் மோடி கலந்து
கொண்டது குறிப்பிடத்தக்கது.
2. உ.பி.,யில் பிரதமருடன், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் யோகா செய்தனர். ஆமதாபாத்தில் அதிகாலை 5.30 மணிக்கு நடந்த யோகா நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா, யோகா குரு ராம்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
3. தலைநகர் டில்லியில் லோதி கார்டன், நேரு பார்க், தல்கடோரா கார்டன், இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது.

4. டில்லியின் கன்னவுட் பகுதியில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய்ய நாயுடு, விஜய் கோயல், டில்லி துணைநிலை ஆளுனர் அனில் பைஜல், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
5. பல்வேறு மூத்த அமைச்சர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

6. எல்லையில் லடாக் பகுதியில் 18,000 அடி உயரத்தில், மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்தோ - திபெத்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் யோகா செய்தனர்.
7. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்கப்பலில் நடந்த யோகா நிகழ்ச்சியிலும், மும்பை கடற்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் இந்திய கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
8. இந்திய பெருங்கடல் பகுதியில் நடுக்கடலில் 3 போர்க்கப்பல்களில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐஎன்எஸ் ஷிவாலிக், கமோர்ட்டா, ஜோதி ஆகிய போர்க்கப்பல்களில் பணியாற்றும் கப்பற்படை வீரர்கள் யோகாசனம் செய்தனர்.
9. சீனா, ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 180 நாடுகளில் சர்வதேச யோகா தினம் ஒரு வார கொண்டாட்டமாக நடந்து வருகிறது.
10. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐ.நா., தலைமையக கட்டிடத்தில் யோகா பயிற்சி வடிவங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
முழுவதிலும் சுமார் 180 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று 3 ஆண்டுகளுக்கு முன் ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., அறிவித்தது. தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக