kutti.revathi
சில
நாட்களுக்கு முன், ஒரு திரைக்கலைஞரைச் சந்தித்தேன். சந்திப்பின்
சாராம்சமாய் நினைவில் இருப்பது, நாம் எல்லோரும் 'digital alzheimer' நோயால்
பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று அவர் கூறியதுதான். அதாவது, மூன்று
நிமிடங்களுக்கு ஒரு முறை நம் நினைவை அழிக்கும் நோய்.
ஒவ்வொரு மூன்று நிமிடமும் ஒரு நினைவிலிருந்து வேகமாய் நழுவி இன்னொரு நினைவிற்குள் விழுந்து விடுகிறோம்.
விரல்களுக்கு இடையே நழுவும் காலத்தைப் போலவே, நழுவிய அந்த நினைவையும் நினைவூட்டிக்கொள்ளும் மனிதத் திறனை இழந்துவிட்ட காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

'digital alzheimer', நோயின் தீவிரமான பின்விளைவு, நாம் எல்லோரும்
சிதறிப்போய் அவரவர் தனிமையில் உறைந்து கிடப்பது. டிஜிட்டல் உலகம்,
இணையத்தளம், சமூகவலைத்தளங்களின் தறிகெட்ட தகவல் பரப்புமுறை இவை எல்லாம்
இந்த நோயை வேகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக