வியாழன், 25 மே, 2017

தந்தி டிவி .. சீமான் வீசிய பந்துகள் .. அடி விழுந்தது ரஜினிக்கு? பாஜகவுக்கு?


நேற்று 24.05.2017 அன்று தந்தி டிவியில் “அரசியலில் ரஜினி: அஞ்சுகின்றனவா கட்சிகள்?” என்றொரு விவாதம் நடந்தது. அதில் சீமான், பாஜக கே.டி.ராகவன், பெருமாள் மணி, நடிகை லட்சுமி போன்றோர் பங்கேற்றனர்.
நேற்று 24.05.2017 அன்று தந்தி டிவியில் “அரசியலில் ரஜினி: அஞ்சுகின்றனவா கட்சிகள்?” என்றொரு விவாதம் நடந்தது. அதில் சீமான், பாஜக கே.டி.ராகவன், பெருமாள் மணி, நடிகை லட்சுமி போன்றோர் பங்கேற்றனர். முதல் இருபது நிமிடங்கள் சீமான் மட்டும் பேசினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் ரஜினி எனும் தமிழரல்லாத நபர் ஆள நினைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று பேசினார். நெறியாளர் அசோக வர்ஷினி கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் அவர் மேற்கண்ட கருத்திலேயே நின்று கொண்டு வேறு வேறு விளக்கத்தை கொடுத்தார்
ரஜினியின் முன்னோர்கள் கிருஷ்ணகிரியில் பிறந்தாலும் அவர் மராட்டியரே, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக்கின் வாரிசுகள் இங்கே வந்து ஆள முடியுமா, 400 ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்த ஆங்கிலேயர்கள் ஆள முடியுமா? என்றவர், பெரியார் கூட இங்கே நான் சேவைதான் செய்வேன், ஆளும் தகுதி பச்சைத் தமிழர் காமராஜருக்கு மட்டுமே உண்டு என்று பேசியதாக கூறினார்.
தமிழன் நினைத்தால் கர்நாடகத்திலோ இல்லை மராட்டியத்திலோ முதல்வர் ஆக முடியுமா என்றும் கேட்டார். ப.சிதம்பரம் கூட கர்நாடகத்தில் மேலவை எம்பியாக முடியவில்லை என்றார். ஆனால் அதே ப.சிதம்பரம் மராட்டிய சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கினால் இன்று மேலவை உறுப்பினராக இருப்பதைப் பற்றி கேட்ட போது அது அவருக்கு தெரியவில்லை.
பெருமாள் மணியோ, “அரசியல் சாசனப்படி இங்கே யார் வேண்டுமானாலும் ஆளலாம். ஒரு தமிழர் பிரதமரானால் கர்நாடகா மராட்டியம் என முழு இந்தியாவையும் ஆளலாம் என்றார். அப்போது மணியை நீ வா என பேசிய சீமான் “உன் அரசியல் சாசனத்தை கொண்டு போடு” என்றார். அந்த நேரத்தில் கேடி ராகவன் நுழைந்தார்.
ரஜினியை சினிமாக்காரர் என்று பழித்துரைக்கிறீர்களே நீங்கள் மட்டும் சினிமா இயக்குநராகத்தானே அரசியலுக்கு வந்தீர்கள், உங்களை மக்கள் அங்கீகரிக்கவில்லையே என்றார். அவரையும் நீ வா என சீமான் பேசியதும், ராகவன் மரியாதையாக பேசுங்கள், இதுதான் தமிழர் பண்பாடா என்று பேசி அடக்கினார். அத்துடன் நெறியாளர் தந்தி டிவியின் டி.ஆர்.பி ரேட்டிங்க அதிகரித்து விட்ட உற்சாகத்துடன் இடைவெளி விட்டார். அதன் பிறகு சீமான் வரவில்லை. நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்காகவே இந்த குறிப்பு. இதில் எமது கருத்து எதையும் எழுதவில்லை. விவாதத்தை பார்க்காதவர்கள் பார்க்கும் பொருட்டு இங்கே யூடியுபின் இணைப்பும் உள்ளது. வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக