சனி, 27 மே, 2017

பாஜக திமுகவை உடைக்க - பிரிக்க -தந்திரங்களை ஆரம்பித்துவிட்டது ...

தமிழகத்தில் காலூன்றுவதற்காக எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்ல பாஜக தயாராக உள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலா சிறை, ஓபிஎஸ் தனி அணி என பல சோதனைகளைச் சந்தித்த அதிமுகவை செயலிழக்கச் செய்து தன் வழிக்கு கொண்டு வரும் அரசியலை மிகச் சிறப்பாக செய்து வருகிறது பாஜக. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மத்திய பாஜக அரசின் வியூகம்தான், ஐடி ரெய்டு. அமைச்சர் விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன் என அதிமுக நிர்வாகிகள், அரசுப் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் என வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதுமட்டுமால்லாமல் தினகரனின் கைது அமைச்சர்களை நிலைகுலைய செய்தது. வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையைக் கண்டு மிரண்ட மற்ற அமைச்சர்களும் நிர்வாகிகளும் அடுத்த ரெய்டு யாருக்கு என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். அந்த தருணத்திலேயே மத்திய பாஜக அரசிற்கு கட்டுப்பட்டு செல்லலாம் என முடிவெடுத்தவர்களாக செயல்பட்டு வருகின்றனர். நினைத்தபடி அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்ட நிறைவோடு “பிராஜக்ட் திமுக”வை தொடங்கிவிட்டதாம் பாஜக.
அதற்காக திமுக தலைவர்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவினர் பலர் கல்வித் தந்தைகளாக செயல்பட்டு வருவதால் அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடத்தலாம் என திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐடி ரெய்டு வேண்டாம் என நினைக்கும் திமுக தலைவர்களை பேரம் பேசி புதிய கட்சியைத் தொடங்கவோ அல்லது தொடங்கப்படும் புதிய கட்சியில்(ரஜினி கட்சி தொடங்கினால்) இணையுமாறு பணிக்கவோ பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை திமுக தலைவர்கள் அதற்கு மறுத்தால் ஐடி ரெய்டு உறுதி. இதுதான் பாஜகவின் திமுகவிற்கான திட்டம். மேலும் 2 ஜி வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இதனால் திமுக மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் மட்டுமல்ல திமுக தலைமையே பீதியில் உள்ளதாம். மோடி, அமித் ஜோடியின் வியூகங்களால் பாஜகவிற்கு பலம் இல்லாத மாநிலங்களிலும் கூட காலூன்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் பாஜக தலைமை எடுத்து வருகிறது. அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டு வருவதால், எடுத்த காரியத்தை செவ்வனே நிறைவேற்றும் பாஜகவின் அடுத்த இலக்காகிவிட்டோமே என திமுக மிரண்டு நிற்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த அரசியல் திருப்பதிற்கு தயாராக இருப்போம்.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக