செவ்வாய், 9 மே, 2017

இந்தியாவில் பூநூல்தான் அரசியல், பொருளாதாரம் எல்லாமுமே.. பூணுலை தவிர்த்து பேசுபவன் பார்பன அடிவருடி?

ArunThamizhstudio : இன்னமும் இங்கே பூணூலை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்க வேண்டுமா என்று நிறைய பேர் நொந்துக்கொள்கிறார்கள். பூணூல் தவிர்த்து அரசியல், பொருளாதாரம் என்பதெல்லாம் இங்கே ஒன்றுமே இல்லை. இங்கே எல்லாவற்றையும் ஏதோ ஒருவகையில் நிர்ணயிக்கும் சக்தியாக பூணூல் இருக்கிறது. ஒரு பெண்ணின் உள்ளாடையை கழற்ற சொன்ன பரதேசிக்கு ஒருவனின் பூணூலை கழற்று என்று சொல்ல தெரியாதா? ஆனால் தப்பி தவறி கூட இங்கே ஒருவனால் அப்படி சிந்தித்துக் கூட பார்க்க முடியாது. நீட் தேர்வில் உள்ளாடையை கழற்ற சொல்லலாம், சட்டையின் கைகளை அறுத்து அவனது சுயமரியாதையை சீண்டி பார்க்கலாம், சிலுவையும், குல்லாவும் அணியக்கூடாது என்று சட்டம் போடலாம், ஆனால் எந்த தடையும் இல்லாமல் இங்கே ஒருவன் பூணூல் அணியலாம். பூணூல் அணிந்தவன் பூணூல் வழியே பிட்டு பேப்பர் வைத்திருக்க மாட்டான், அவன் பரிசுத்தமானவன் என்பதுதான் இங்கே காலம் காலமாக கற்பிக்கப்பட்ட உண்மை.
நீட் தேர்வில் யாரோ ஒருவனது பூணூல் அறுக்கப்பட்டிருந்தால் கூட இந்நேரம் நாடாளுமன்றம் கூடியிருக்கும். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் எல்லாம், தன்னிச்சையாக வழக்கை எடுத்துக்கொண்டு, நீட் தேர்வை ரத்து செய்யும் அளவிற்கு போயிருக்கும். ஆனால் சாதாரண மக்களின் ஜட்டியை கழட்டலாம், கோமணத்தை அவிழ்க்கலாம், சட்டைகளை கிழிக்கலாம், கையில் கட்டியிருக்கும் காப்பு கயிறுகளை வெட்டி எறியலாம், குடியானவனின் குடியை கெடுப்பதுதான் இங்கே சட்டம், அந்த சட்டம் பூணூலுக்கு எப்போதும் தனிமரியாதை வழங்கி பாதுகாக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை பூநூல்தான் அரசியல், பொருளாதாரம் எல்லாமுமே. பூணூலை தவிர்த்து பேசுங்கள் என்று சொல்லுபவன் ஒன்று கடைந்தெடுத்த முட்டாளாக இருக்க கூடும், இல்லை பூணூல் போர்த்தாத பார்ப்பன அடிவருடியாக இருக்க கூடும்.

1 கருத்து: