Buddhism is the second largest religion in Malaysia, after Islam, with 19.2% of Malaysia's population being Buddhist although some estimates put that figure up to 21.6% when combined with Chinese religions.
Gauthama Sanna :மலேசியப் பயணத்தில் எனது வரலாற்றுப் பார்வை விசாலமடைந்தது என்பதை மறுப்பதற்கில்லை. கருத்தரங்கில் கேட்கப்பட்டக் கேள்விகள் மற்றும் அதற்கான விடைகள் அந்த வகையில் எனக்கு உதவின. மணிமேகலையில் கூறப்படும் மணிமேகலா தெய்வம் கடல் வழியாக பௌத்தத்தை கொண்டு போய் சுவர்ணத் தீவில் எனும் மலேசியாவில் கொண்டுபோய் சேர்த்தது என்பதை வெறும் கட்டுக்கதையல்ல. அது ஒரு குறியீடுதான் என்றாலும் மணிமேகலையின் காலத்தில் பௌத்தம் தமிழர்களால் அங்கே கொண்டுபோய் சேர்க்கப்பட்டதை அது குறிக்கிறது என்பதில் ஐயமில்லை.
கருத்தரங்கிற்குப் பிறகு அடுத்து, சில நாள்கள் அங்கிருந்த ஆய்வாளர்களோடு பெரும் விவாதங்களும் ஆலோசனைகளும் நடந்தன. குறிப்பாக முனைவர் சுபாஷிணி அவர்கள் இந்த அடிப்படையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். மேலும், பேராசிரியர் கண்ணன், ஒரிசா பாலு மற்றும் மலேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆகியோரையும் குறிப்பிட முடியும். ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்தப் பிறகு முனைவர் சுபாஷிணி மற்றும் அவரது நண்பர்களுடன் நள்ளிரவுகளைத் தாண்டி வரலாற்று உரையாடல்கள் நீண்டன. அதற்குப் பிறகு எனது மலேசியச் சுற்றுப் பயணத்தில் வரலாறு தொடர்பான இடங்களுக்கு நேரில் போய் பார்ப்பது என்ற எனது விருப்பத்தினை குறிப்பிட்டேன். எனவே, அதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொடுத்ததுடன் முனைவர் சுபாஷிணி மற்றும் அவரது நண்பர்கள் என்னை அழைந்துக் கொண்டு போய் தேவைப்படும் இடங்களை காட்டினர். அதில் மிக முக்கியமான மலேசிய அருங்காட்சியகங்களும், பல நாட்டு பௌத்த விகாரைகளும்.
அந்த இடங்களைப் பார்த்தப் பிறகு மனதில் உருவான சித்திரம் என்னவெனில், தமிழர்கள் மலேசியாவிற்கு மட்டுமல்ல, தெற்காசிய நாடுகள் முழுமைக்கும் பௌத்தத்தைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. அதற்கான ஆதாரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கின்றன என்பதும் புரிந்தது. தமிழகத்தின் தென்பகுதி மற்றும் இலங்கை கடல் மார்க்கமாக பௌத்தம் பரப்பப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மண்ணின் மைந்தர்கள் அந்தப் பணியினை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக, தமிழ் பௌத்தத்தின் அடிப்படைகளே தெற்காசிய முழுவதும் பரவியிருக்கிறது என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.
தெற்காசியாவின் எந்தப் பகுதியிலும் கொனிமா என்கிற புத்த பெண் தெய்வத்தை நம்மால் காண முடியும். கையில் சிறிய தண்ணீர் குடத்தை வைத்துக் கொண்டு காட்சித் தரும் கொனிமா தமிழகத்தின் தாராதேவி எனும் பௌத்த தெய்வமேதான். பிணாங்கில் சீனர்கள் அமைத்திருக்கும் மிக பிரமாண்டமான கொனிமா எனும் தாராதேவி சிலையினைப் போல வேறெங்கும் காண முடியுமா என்பது சந்தேகமே. சிறு குன்றின் மீது நூறடிக்கு மேல் உயரமுள்ள செம்பு மற்றும் பித்தளைக் கொண்டு அமைக்கப்பட்டு வரும் தாராதேவி சிலை ஓர் அதிசயம்தான்.
அதேப் போல எங்குப் பார்த்தாலும் அவலோகிதரின் சிலைகள் பல்வேறுத் தோற்றங்களில் காண முடியும். இந்த அவலோகிதர்தான் மகாயான பௌத்தப் பிரிவின்படி தென் தமிழகத்தில் உள்ள பொதிய மலை எனும் போதியில் மலையில் குடிகொண்டு அருள் பாலித்தவர் என தமிழ் மரபு பௌத்தம் குறிப்பிடுகிறது. இந்த பொதிய மலை ஜப்பானியர்களுக்கும் சீனர்களுக்கும் புனித இடம் என்று சொன்னால் அது ஆச்சர்யமாக இருக்கும். போத்தகலா என சீன ஜப்பானிய இலக்கியங்கள் குறிப்பிடும் இடத்தினை கண்டுப்பிடிக்க பெரும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள், பத்தாண்டுகளுக்கு முன்புதான் அது பொதிகை மலை என உறுதிசெய்யப்பட்டது என்பது அண்மைய வரலாற்று ஆய்வு முடிவு.
இந்த தகவல்களை எல்லாம் நண்பர்களுடன் விவாதித்ததேன். இவற்றின் வரலாற்றுத் தாக்கத்தின அவர்கள் உணர்ந்துக் கொண்டது எனக்கு மகிழ்க்சியளித்தது. பிறகு, எதிர்காலத்தில் வாய்ப்பிருக்குமானால் தெற்காசியா முழுமைக்கும் தமிழ் பௌத்தத்தின் அடிக்சுவடுகளை கண்டறியும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், அது கள ஆய்வு மற்றும் பிற வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். விரைவில் அதற்கான திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்துவோம், அதற்கு உங்களுடைய கள ஒத்துழைப்பும் தேவை என்று முனைவர் சுபாஷிணி அவர்கள் முன்வைத்த முன்வைப்பை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அதில் முழுமையாக என்னால் ஈடுபட நேரம் வாய்க்குமா என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்க வேண்டும். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தமிழ் மரபு அறக்கட்டளையில் ஆண்டு விழா நிகழ்வில் அதை அறிவிப்பதாகவும் அந்நிறுவனத்தின் தலைவரான முனைவர் சுபாஷிணி அவர்கள் தெரிவித்தார். அது நடக்கும் என நம்புகிறேன்.
நிலைமை இப்படியிருக்க, மனத்தின் எண்ணவோட்டங்கள் பல்வேறு சிந்தனைகளோடு மலேசிய மண்ணை ஆய்வு செய்ய ஆர்வம் காட்டியது. சுவர்ண தீவு என்று பண்டைய இலக்கியங்கள் குறிப்பிடும் மலேசியாவில் சங்ககாலத்திலேயே பௌத்தம் போய் சேர்த்தது. பழங்குடி வழிபாடுகளிலிருந்த மலேசிய மண்ணின் மைந்தர்கள் பௌத்தத்தை வரவேற்று உள்வாங்கினர். எனவே முதல் நிறுவன மதமாக அங்கே பௌத்தம் காலூன்றி அவர்களின் பண்பாட்டினை இன்றுவரை காத்துக் வருகிறது என்றால் அது மிகையல்ல. மலேசிய மக்களிடம் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு இதுவே அடித்தளம்.
மலேசியாவில், மலேயர்கள், சீனர்கள், தமிழர்கள் ஆகியோர் முதன்மையானக் குடிகள். இவர்கள் மூவருக்கும் பண்டைய பௌத்தம் அமைத்த அடித்தளம் அவர்களது வாழ்க்கை முறையில் எவ்விதமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். மலேசியர்கள் இசுலாமியர்களாக மதம் மாறியிருந்தாலும் அவர்களால் பிற மதங்களை மதித்து போற்றும் மனநிலை வாய்த்ததற்கு உள்ள காரணம் இந்த அடிப்படையில் அமைந்ததுதான்.
மலேசிய இசுலாமியர்கள் இந்துக்களின் கோயில்களுக்கும், பௌத்த கோயில்களுக்கும் போவதை மகிழ்ச்சிக்குரியதாகவே பார்க்கிறார்கள். இந்த மத மக்களோடும் இயைவது மட்டுமின்றி, அவர்களின் வழிபாடுகளை ஒழுங்குப்படுத்தி தருவது, பண்டிகைகளில் கலந்துக் கொள்வது உள்ளிட்ட பண்பாட்டு விழுமியங்களை தொடர்ந்து பேணி வருகிறார்கள். நான் சந்தித்த ஒரு மலேசிய இசுலாமிய பெண்மணி முருகன் கோயிலில் பூசை வைத்து பொங்கல் இடுவது உள்ளிட்டவைகளில் அவரும் அவரது கிராமத்தவரும் காலங்காலமாக ஈடுபட்டு வருகிறோம் என்றும், அண்மைக்காலமாக சில இசுலாமியர்கள் அதை எதிர்க்கிறார்கள் என்றும் ஆதங்கப்பட்டார். மேலும், நாங்கள் முஸ்லிம்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எனது அண்டை வீட்டுக்காரர்களின் மதங்களை மதிப்பதினால் என்ன குறை வந்துவிடும். அவர்களின் மகிழ்ச்சியில் பங்குபெறும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது என்று அங்லாய்த்தார். இதுதான் பெருவாரியான மலேசிய இசுலாமியர்களின் மனநிலை. ஆனால் அதில் தற்போது மாறுதல்கள் உருவாகியிருப்பது அரசியல் காரணங்களுக்காகத்தான் என்பது தனிக்கதை.
மலேசியர்கள் அமைதியையும் இணக்கத்தையும் விரும்பவர்கள் என்பது அவர்களது பண்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. அது அவர்கள் முன்பு கடைபிடித்து வந்த பௌத்தத்தினால் விளைந்ததுதான். மேலும் பிற இசுலாமிய நாடுகளைப் போல் அல்லாமல் பெண்கள் தமது முன்னேற்றத்தை தாமே தீர்மானித்துக் கொள்ளும்படியான சூழல் நிலவுவதற்கும் அதுதான் காரணம் என்று நினைக்கிறேன். மலேசியாவில் பெண்களின் கல்வி உயர்ந்த தரத்தில்தான் இருக்கிறது. இசுலாமியப் பெண்கள் எல்லா பணியிடங்களிலும் நிறைந்திருக்கிறார்கள். உழைத்து முன்னேறி சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தங்கள் தனிப்பட்ட உரிமையினை அவர்கள் விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை.
சீனர்கள் மற்றும் தமிழ்ப் பெண்களும் ஏறக்குறைய இதேப்போலத்தான் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமளிக்கிறது. மலேசிய முழுமைக்கும் வேலைக்குப் போகாதப் பெண்களை பார்ப்பதே அரிது என நினைக்கிறேன். அதிகாலையிலிருந்தே அவர்கள் சுறுசுறுப்பாக வேலைப் பார்க்கிறார்கள். கல்வி கற்பதில் முன்னணியில் நிற்கிறார்கள், கணவரின், தந்தையின் வருமானத்தை மட்டும் சார்ந்திருப்பது அவர்களுக்கு அவ்வளவு உவப்பனாதாக தெரியவில்லை. வீட்டிலிருக்கும் பெண்மணிகள் அநேகமாக அண்மையில் குடியேறியவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது அனுமானம். எனவே மலேசியப் தமிழ்ப் பெண்கள் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
எனினும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மலேசிய மண்ணை பௌத்தம் பண்படுத்தி வைத்ததினால் அங்கே நிகழ்ந்த மாற்றங்களை தற்போதை பொருளாதார வளர்ச்சின் போக்கு சிதைத்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. அதுதான் தற்போதை தேசிய இனங்களின் முரண்பாடுகளாகவும், தோட்டத் தொழிலாளர்களின் முரண்பாடுகளாவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அவை எப்படி நிலவுகின்றன என்பதைத் தொடர்ந்துப் பார்ப்போம்.
சன்னா
16.05.2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக