எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க மே 23-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். மே 24-ம் தேதி பிரதமர் இல்லத்திற்கு சென்று மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பில் தமிழகம் சம்பந்தமான முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த அறையை, பசு பாதுகவலர்கள் அமைப்பு முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். டெல்லியில் முதல்வர் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தை பசு பாதுகாவலர்கள் முற்றுகையிட்டு இறைச்சிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினர். முதலில் முதல்வரை சந்திக்க வேண்டும் என பசு பாதுகாவலர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் முதல்வர் தங்கியிருந்த அறையை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். திருச்சியில் செயல்பட்டு வரும் சட்டவிரோதமான இறைச்சிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இவர்கள் கோரிக்கை விடுத்தனர். பிறகு 3 இளைஞர்களுக்கு மட்டும் முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சட்டவிரோதமான இறைச்சிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக