வியாழன், 18 மே, 2017

குமரி அனந்த மகள் தமிழிசை சவுந்தரராஜன் , சித்தப்பன் வசந்தகுமார் ,,,, நவீன குடும்ப மாபியா?

stanley.rajan.:   22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 900
கோடி ரூபாய் வியாபாரம்: வசந்த் & கோ நிறுவனரின் கதை என சில பத்திரிகைகள் எழுத தொடங்கிவிட்டன < ஆனால் குமரி அனந்தன் என்பவர் யார்? அவர் என்ன செய்தார்? அவருக்கும் வசந்தகுமாருக்கும் என்ன உறவு என்பதெல்லாம் பற்றி ஒரு பயலும் எழுதமாட்டான்
வசந்தகுமார் என்பவர் விஜிபி போல தானாக வளர்ந்தார் என நம்பிகொள்ளவேண்டும், நம்பிகொள்வோம்
முன்பு ஒரு வெறிபிடித்த முன்னாள் காங்கிரஸ்காரரிடம் பேசிகொண்டிருந்தேன், தெற்கு பகுதியினை சார்ந்தவர் மிக பெரும் காங்கிரஸ் பக்தர் அல்லது தொண்டர்
குமரி அனந்தனின் தமிழ் அவருக்கு மிக பிடித்தமான ஒன்று, ஒருமுறை நாகர்கோவிலில் குமரி அனந்தன் இலக்கியம் பற்றி 4 மணிநேரம் பொதுகூட்டத்தில் பேசி அனைவரையும் கட்டிபோட்ட கதை எல்லாம் சொன்னார்

சொல்லிகொண்டே வரும்பொழுது அவர் முகம் மாறிகொண்டே வந்தது, அப்படி எல்லாம் அவர் மீது அனுதாபம் கொண்டிருந்தோம், "அவருக்காக பல மைல்கள் சைக்கிள் மிதித்து நாங்கள் திரட்டிய நன்கொடைகள் எல்லாம் ஏராளமானவை
குமரிஅனந்தன் மீது தென்னக மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை அப்படி
இன்று தமிழிசை பாஜகவிற்கு கரகாட்டம் ஆடும் காலத்தில் அவரின் அமைதியினையும், தமிழிசையின் அழிச்சாட்டியத்தையும் பார்க்கும்பொழுது இவர்களுக்கா உழைத்தோம் என்ற அவமானமே மிஞ்சுகின்றது"
சொல்லிமுடிக்கும்பொழுது அவர் குரல் கம்மியிருந்தது, இன்னும் எத்தனை உண்மை தொண்டன் அழுகின்றானோ தெரியாது.
வசந்தகுமாருக்கு கவர் ஸ்டோரியாம், அடுத்து அக்காலத்திலே நீட் தேர்வு எழுதினார் தமிழிசை என அடுத்த ஸ்டோரி விரைவில் வரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக