”அ.இ.அ.தி.மு.க. கொடியில் உள்ள கருப்பு, சிவப்பு, அண்ணா என்கிற புற அடையாளங்கள் திராவிட இயக்கம் எனும் ஒரு மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
அ.இ.அ.தி.மு.க.வின் சாதனைகளாக சொல்லப்படுவதைக் கீழ்க்காணும்படி வரிசைப் படுத்தலாம். (1) 69 சதவிகித இட ஒதுக்கீடு (2) தமிழில் பெரியார் எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது, (3) கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வந்த திட்டம் (4) முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் (5) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
இச்சாதனைகள் எல்லாம் அக்கட்சி சிந்தித்து செயல்பட்ட கொள்கை வயப்பட்ட சாதனைகள் இல்லை/
பெரியார் நூற்றாண்டின்போது சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அருகே உள்ள பெரியார் சிலையை எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார். மணியம்மை அந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடவுளே இல்லை என்று சொல்கிற பெரியார்-பெரியார் கட்சியினர் தமிழில் அர்ச்சனைக்கு வற்புறுத்துவதும் கர்ப்பகிரகம் சென்று தொட்டு வணங்குவதற்குப் போராட்டமும் செய்வது ஏன் என்று எம்.ஜி.ஆர். கேட்டார். இதிலிருந்து தெரிவது என்ன? ஒரு கொள்கைக்கும், உரிமைக்கும் உள்ள வேறுபாட்டை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதாவது அவருக்குத் திராவிட இயக்கக் கொள்கையைப் பற்றிய சரியான, தெளிவான புரிதல் இல்லை என்பதே.
தி.மு.க. திராவிட இயக்கத்தின் மூலக் கொள்கைகளை தாமாகவே முன் வந்து நிறைவேற்றிக் காட்டியது. அது குறித்து வழக்குகளைச் சந்தித்தது. நலத்திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன.எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ திராவிட இயக்கத்தின் எந்த மூலக்கொள்கைகளையும் அவர்களாகவே முன்வந்து அவர்களின் ஆட்சியின்போது சாதனைகளாக நிகழ்த்திக் காட்டவில்லை பொத்தாம் பொதுவாக அ.இ.அ.தி.மு.க.வையும் தி.மு.க.வோடு இணைத்து ‘திராவிட இயக்கம்’ என்று கணக்கிட்டுச் சொல்வது மெய்யாகாது.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக