செவ்வாய், 9 மே, 2017

மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டினால் 'லைசென்ஸ்' ரத்து

சென்னை: மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டினால், உடனடியாக லைசென்சை ரத்து செய்யும்படி, அரசு போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டு உள்ளார். அவர் கூறியுள்ளதாவது: நாட்டிலேயே, தமிழகத்தில் தான் அதிகளவில், விபத்து உயிரிழப்புகள் நிகழ்கின்றன. உயிரிழப்புகளை தடுப்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தின் சாலை பாதுகாப்பு கமிட்டி விவாதித்தது. அது, மோட்டார் வாகனம், சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக கண்காணிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அதிவேக பயணம், போதையில் வாகனம் ஓட்டுதல், மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் லைசென்ஸ், உடனடியாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட வேண்டும். ரத்தாகவில்லை: தமிழகத்தில், 2017 காலாண்டில் மட்டும், அதிவேகமாக பயணம் செய்த, 61 ஆயிரத்து, 177 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆனால், ஒருவரின் லைசென்சும் ரத்து செய்யப்படவில்லை. அதே போல, 71 ஆயிரம் பேர் மீது, போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதியப்பட்டும், யாருடைய லைெசன்சும் ரத்தாகவில்லை. இனி, இந்த விதிமீறல்களுக்கு, உடனடியாக லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும். அது குறித்த விபரங்களை, ஒவ்வொரு மாதமும், 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக