ஆளும்
கட்சியில் உள்ள அதிமுகவில் (அம்மா அணி ) உள்ள 122 எம்எல்ஏக்களில்
அமைச்சர்கள் போக, மீதி உள்ள எம்எல்ஏக்கள், அணி அணியாகவும், தனித்தனியாகவும்
முதல் அமைச்சர் எடப்பாடியை தினறடித்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள்
தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் தலைமையில் 11
எம்எல்ஏக்கள் முதல் அமைச்சர் எடப்பாடியை சந்தித்து தங்களது தொகுதியில்
நிறைவேற்றாத திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியதாக
கூறினார்கள்.ஆனால்
அவர்களுடைய எதிர்பார்ப்பு முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சர் பதவியும்,
மற்றவர்களுக்கு உரிய அந்தஸ்தும் ஏற்கனவே கூவத்தூர் முகாமில் பேசியப்படி
செட்டில்மெண்டும் செய்யவில்லை என எடப்பாடியை மிரட்டும் தொணியில் பேசிவிட்டு
வந்தார்கள். அதற்கு ஒரு வாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை
கூட்ட வேண்டும் என்றும் கெடுபிடித்து வந்தார்கள். இநத நிலையில் நேற்று
அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு தலைமையில் 10 எம்எல்ஏக்கள்
முதல் அமைச்சர் எடப்பாடியையும், மூத்த அமைச்சர் செங்கோட்டையனையும்
சந்தித்து வந்தார்கள்.
இந்த 10 பேரும் வெளியே சொன்னது, எங்கள் தொகுதியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதையெல்லம் விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும் என இன்னும் மக்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து வந்தாக கூறினார்கள்.
ஆனால் இவர்களும் முதல் அமைச்சர் எடப்பாடியிடம் பேசியது, செட்டில்மெண்ட் பற்றியே என்று கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவே நண்பர்களிடம் கூறியிருக்கிறார். அப்படி அவர் கூறிய தகவல்கள், அதாவது கூவத்தூர் முகாமில் பேசப்பட்ட தொகையை நீங்கள் வழங்கவில்லை. அப்போது இங்கு உள்ள 122 எம்எல்ஏக்களும் எந்த சூழ்நிலையிலும் அணி மாறக்கூடாது என்று எங்களிடம் சத்தியம் வாங்கினீர்கள்.
எங்களிடம் சத்தியம் வாங்குவதற்கு முன்பு சின்னம்மா சசிகலாவும், தினகரனும் முதல் அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியும் எங்களுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தீர்கள். அது மாதாமாதம் 25 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும், காண்ட்ராக்ட் கமிசனில் இதற்கு முன்பு 10 சதவீதம் என்று இருந்ததை, 35 சதவீதமாக உயர்த்தி தருவதாக உயர்த்தியும் அது இல்லாமல் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் சிறப்பு நிதியாக கோடிக்கணக்கில் ஒதுக்குவதாகவும் அதன் மூலம் பல கோடி எங்களுக்கு கிடைக்கும் என்று கூறினீர்கள். ஆனால் கூவத்தூர் முகாமில் இருக்கும்போதே அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு செல்ல நேர்ந்தது. அந்த சூழலை பயன்படுத்தி எங்களுக்கான முதல் செட்டில்மெண்ட்டே நடக்கவில்லை.
இப்போது உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 30, 40 கோடி சம்பாதித்துவிட்டார்கள். ஆனால் நாங்கள் அதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறோம். அம்மாவின் ஆட்சி தொடர வெண்டும் என்று விரும்பித்தான் உங்களுடைய வாக்குறுதிகளை நம்பித்தான் இப்போதும் ஆதரிக்கிறோம். ஆனால் ஒரு கூட்டம் மட்டுமே கோடியில் புரளுகிறது. நாங்கள் என்ன இளிச்சவாயர்களா. இன்னும் ஒரு வாரத்திற்குள் எங்களுக்கு பேசியப்படி பணத்தை செட்டில் செய்ய வேண்டும். பணம் தான் முக்கியம். வேறு எதுவும் பேசுவதற்கு இல்லை. உங்களுக்கு எப்படி பணமும், பதவியும் முக்கியமோ, அதேப்போல எங்களுக்கு பணம் முக்கியம். பதவி வேண்டாம். இவ்வாறு முகத்தில் அடித்தார்போல் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் பேசியிருக்கிறார்கள் எம்எல்ஏக்கள்.
;ஆக இந்த ஆட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் பணத்தை நோக்கி தங்களது ஆட்டத்தை தொடங்கிவிட்டார்கள்.">ஜீவா தங்கவேல் நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக