திங்கள், 8 மே, 2017

டாக்டர் கிருஷ்ணசாமி: சாதி சாக்கடையில் இருந்து தேவேந்திர குலம் வெளியேற பாஜகதான் உதவுகிறது!

கட்சிக்குள்ளேயே தலித் அணிஎன்று பிரித்தே வைத்திருக்கும் ஒரே கட்சி இந்தியாவிலேயே பாஜகதான் என்பது இந்த அறிவாளிக்கு தெரியவில்லை .. ராஜ்யசபா ஆசை டாக்டரை ஆட்டுவிக்கிறது?
இந்த சாதி சாக்கடையிலிருந்து தேவேந்திர குலம் வெளியேற பிஜேபி தான்
உதவுகிறது. அவர்களை அரசியல் ரீதியாக ஆதரிப்பதில் என்ன தவறு : டாக்டர்.கிருஷ்ணசாமி
சாதி இழுக்கிலிருந்து வெளியேறத்துடிக்கும் உங்கள் எண்ணம் நல்லதுதான் டாக்டர். ஆனால் அதற்கு நீங்கள் பாஜகவை நம்புவதுதான் சந்தேகம் அளிக்கிறது. சாதியை உருவாக்கி...நீடிக்க செய்யும் இந்துத்துவத்தின் அரசியல் பிரதிநிகள்தான் அவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா டாக்டர்..?
புரியாட்டி இந்த படத்தை பார்த்தாவது புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க ஜி  முகநூல்  உபயம் கருப்பு கருணா

முகநூல் உபயம் ஆனந்தன் தமிழ்:   இது மாதிரி BC அணி OCஅணி என்றோ கவுண்டர் அணி முதலியார் அணி என்று பிரித்து BJP அரசியல் நடத்த முடியுமா.கட்சியில் கூட தலித்துகளை பிரித்தே அரசியல் நடத்தும் சங் கூட்டம் என்பதை நிரூபித்து விட்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக