ஞாயிறு, 28 மே, 2017

தீவிரவாதியின் இறுதிச் சடங்கில் லட்சம் பேர்… முன்னாள் முதல்வரின் இறுதி யாத்திரையில் சில நூறு பேர்கள் ..


காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச்
சேர்ந்த சப்ஸ்ஸார் அகமது பட் மற்றும் அவரது உதவியாளரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
இதனை கண்டித்து காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடைகள், வர்த்த நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தீவிரவாதிகளின் உடல் நேற்று அவர்களது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அதில் பொதுமக்கள் பங்கேற்க போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதனால் இன்று அவர்களின் இறுதிச் சடங்கை நடத்த பிரிவினைவாத அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.  முடிந்த அளவு மக்கள் இதில் கலந்து கொள்ளாமல் இருக்க, மொபைல் சேவைகள் முடக்கம், ஊரடங்கு உத்தரவு ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான வன்முறையில் பொதுமக்களில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் காஷ்மீரில் தீவிரவாதி புர்கான் வாணி கொல்லப்பட்ட போது, அதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அதே நேரம் அந்த மாநில முதலமைச்சராக இருந்த முஃப்தி முகமது சயீத் இறந்த போது சில நூறு பேர் மட்டுமே பங்கேற்றனர். இதனை கண்டு அரசியல் கட்சிகள் ஆடிப்போயின.
மத்திய மாநில, அரசுகள் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகள் பொதுமக்களை தீவிரவாதிகளின் பக்கம் கொண்டு போய் சேர்த்து, தனி நாடு கோரிக்கையை வலுப்படுத்தி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக