செவ்வாய், 30 மே, 2017

தங்கம் நுகர்வில் முன்னணியில் இந்தியா .. இந்தியாவில் கேரளா முன்னணியில் ..

சர்வதேச அளவில் தங்கத்தை அதிகமாக நுகர்வதில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டில் இந்திய மக்கள் வாங்கிய நகைகளின் அளவானது சர்வதேச நகைத் தேவையில் ஐந்து சதவிகிதமாக உள்ளது. இது சர்வதேச நாடுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பங்களிப்பை விட (3%) அதிகமாகும். அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையில் இந்தியாவின் தங்கம் பயன்பாடு 92.3 டன்களாக இருந்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் அது 22.9 டன்களாகவே இருந்துள்ளது.

இப்படி இந்தியாவில் இவ்வளவு அதிகமாகத் தங்கத்தின் மீது மோகம் இருக்கிறதென்றால், அப்படி எங்கு இவ்வளவு அதிகமாக தங்கம் வாங்கப்படுகிறது? யார் இவ்வளவு தங்கத்தை வாங்குகிறார்கள் என்ற கேள்விகள் நம்மிடையே எழுகின்றன. அதற்கான பதிலை இங்கே காணலாம்.
முதல் கேள்விக்கான பதில் ஒரே வார்த்தையில் - கேரளா. அதைவிட வேறு எந்த மாநிலத்தில் இவ்வளவு அதிகமான தங்கத்தை வாங்கிக் குவிக்க முடியும்? தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் ’இந்தியக் குடும்பங்களில் பல்வேறு பொருள் மற்றும் சேவைகள் நுகர்வு’ என்ற பெயரில் கடந்த 2011-12ல் மேற்கொண்ட ஆய்வில் நமக்கு இத்தகவல்கள் கிடைக்கின்றன. இந்த ஆய்வில் இந்திய மாநிலங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது; யூனியன் பிரதேசங்களில் தங்கத்தின் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.
மற்றொரு கேள்வி நம்மிடையே எழுவது யாதெனில், கேரள மக்கள் எவ்வாறு பிற மாநிலங்களைவிட அதிகளவில் தங்க நகைகள் மீது ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதே. உதாரணத்துக்குக் கேரள கிராமப் புறங்களில் தங்கம் வாங்குவதற்கு ஆகும் செலவானது பிற மாநிலங்களைவிட மிகமிக அதிகமாக இருப்பதைக் காணமுடிகிறது. தங்கம் வாங்குவதற்கு அதிகமாகச் செலவிடும் மாநிலங்களைப் பட்டியலிட்டால் இரண்டாவது இடத்திலுள்ள கோவாவைவிட கேரளா ஆறு மடங்கு அதிகமாகச் செலவிடுகிறது. மேலும், இப்பட்டியலில் கேரளாவைத் தொடர்ந்து ஆறு இடங்களில் உள்ள கிராமப் புறங்களில் நகை வாங்குவதற்கு ஆகும் தனிநபர் செலவுகளை எடுத்துக்கொண்டால் அது கேரளாவைவிடக் குறைவாகவே உள்ளது.
நகர்ப்புறங்களை எடுத்துக்கொண்டால், பொதுவாகவே இங்கு அதிக வசதிபடைத்தவர் வாழ்வதோடு, பொருட்களை வாங்குவதற்கும் அதிகமாகச் செலவழிப்பர். அவ்வாறு நகை வாங்குவதில் கேரள நகர்ப்புற மக்கள் பிற மாநில மக்களைவிடவும் அதிகமாகச் செலவிடுகின்றனர். கேரளாவில் பண்டிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அங்கு தங்கம் அதிக முக்கியத்துவம் கொண்டுள்ளது. தங்கத்தை யார் அதிகமாக வாங்குகிறார்கள்; அவர்கள் எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
அதாவது கேரள மக்கள் தொகையில் தங்கம் வாங்குபவர்களை 12 பிரிவுகளாகப் பிரித்தால், முதல் பிரிவில் கடைசி 5 சதவிகிதத்தினர், 2ஆவது பிரிவில் 5 முதல் 10 சதவிகிதம் என, இப்பட்டியல் 12ஆவது பிரிவு வரை நீள்கிறது. இதில், கிராமப் புற கேரள மக்களில் தனிநபர் ஒருவர் சராசரியாக தங்கம் வாங்குவதற்கு மாதத்திற்கு ரூ.216.17 செலவழிக்கிறார். அதேபோல, நகர்ப்புற கேரள மக்களில் தனிநபர் ஒருவர் தங்கம் வாங்குவதற்கு மாதத்திற்குச் சராசரியாக ரூ.283.74 செலவழிக்கிறார்.  மின்னம்பலம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக