செவ்வாய், 9 மே, 2017

பணமதிப்பிழப்பு ... எந்த பலனும் கிடைக்கவில்லை ! சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!


பணமதிப்பிழப்பு திட்டம் அமுலுக்கு வந்து, நேற்றோடு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.. பாலும் தேனும் ஓடும் என கணித்த பொருளாதார நிபுணர்களின் கவனத்திற்கு…
- நவம்பர் 8ம் தேதி 14.50 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ500/1000 நோட்டுகள் மதிப்பிழந்தது. இதில் பதுக்கப்பட்ட கறுப்பு பணமாக ஏறத்தாழ 3 லட்சம் கோடிகள் வங்கிகளுக்கு திரும்ப வராது என மத்திய வங்கியின் எதிர்பார்ப்பு.ஆனால் புழக்கத்தில் இருந்த 98 சதவீதம் ரூ500/1000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளது…கறுப்பு பணம் எங்கே?
- கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. தினக்கூலியாக வேலைப் பார்த்தவர்கள் பலர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர். கிராமங்களில் விவசாயமும் இல்லாத போது பலரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை…

- விலைவாசி குறையும் என்றார்கள் ஒன்றும் நடக்கவில்லை
- எல்லையில் தீவிரவாதம் குறையும் என்றார்கள், ஆனால், எல்லை முதல் மத்திய இந்தியா வரை தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது..
- சில்லறை வணிகத்தை நம்பியவர்களும் கடும் சீர்குலைக்கு தள்ளப்பட்டனர்.. தேசிய புள்ளியியல் அமைப்பின் முன்னால் தலைவர் சென், கட்டுமானம், ஓட்டல், விவசாயம், சில்லறை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுளது எனக் குறிப்பிடுகிறார். பண மதிப்பிழப்பால் கடும் அவதிக்கு உள்ளான இத்தகைய தொழில்களின் சர்வநாச புள்ளிவிவரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை?
- அப்படி எந்த தொழில் செழிப்பாக வளர்ந்துள்ளது எனவும் தெரியவில்லை…மக்கள் வாழ்க்கைத் தரமும் உயரவில்லை….ஆனால் இதெல்லாம் நடக்கும், நடக்கும் என மோடி மஸ்தான் மந்திரங்கள் மட்டும் இன்னும் குறையவில்லை… இப்போது அடுத்த பல்லவி தொடங்கியுள்ளது… அனைத்து மாநிலங்களுக்கும் சமச்சீர் வரி (ஜி.எஸ்.டி) அமுலுக்கு வந்தபின், அண்ணாசாலையில் பாலும் தேனும் ஓடும் என உத்திரவாதமாக தெரிவிக்கிறார்கள்… அதையும் பார்க்கத்தான் போகிறோம்..
- வேலை வாய்ப்பின்மை மற்றும் வேலை பறிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.. அமெரிக்க அரசின் கொள்கை, Automation , Competition, மற்றும் பண மதிப்பிழப்பு என எல்லாம் சேர்ந்து மென்பொருள் தொழிலை நெருக்கியுள்ளது.. பல மென்பொருள் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்…இதில் Infosys, Cognizant, TCS, Snapdeal, L&T, IBM, Microsoft என முண்ணனி நிறுவனங்களும் அடங்கும்..
- UN அறிக்கையின் படி, கறுப்புப் பணம் ஒழியவில்லை…இதற்கு வேறு ஏதாவது வழிமுறைகளில் கணக்கில் வராத சொத்துகளை முடக்க வேண்டும் என்றும், பல சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறது…மேலும் இதன் பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும் என எச்சரித்துள்ளது.
இப்படி எந்த பலனும் கண்ணுக்குத் தெரியாததால், வெற்றிலையில் மை தடவிப் பார்த்தும், சோழி உருட்டிப் பார்த்தும் ஒன்றும் புலப்படவில்லை…
நன்றி vasu devan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக