ஞாயிறு, 7 மே, 2017

நீட் தேர்வு .... தமிழகத்தின் தரமான மருத்துவ கல்வியை சீர்குலைக்கும் முயற்சி!

Sivasankaran.Saravanan86 நீட் ஆதரவு மாமாக்களிடம் நாம் கேட்கவேண்டியது : தரம் உயர்த்துதல் என்றால் என்ன?? இருப்பதிலேயே எது சிறந்ததாக உள்ளதோ அதற்கு இணையாக மற்றவற்றையும் மாற்றுவதே தரம் உயர்த்துதல். மாநில அளவில் சிறந்து விளங்குவதை தேசிய அளவிலும், தேசிய அளவில் சிறந்து விளங்குவதை சர்வதேச அளவிலும் உயர்த்துவதே தரம் உயர்த்துதல்.
இந்தியாவில் மருத்துவத்துறை என எடுத்துக்கொண்டால் பொது சுகாதாரத்துறையாகட்டும் தனியார் துறையாகட்டும் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நிலையில் உள்ளது. இந்திய மருத்துவத்துறையின் தலைநகராக தமிழகம் விளங்குகிறது . குழந்தை இறப்பு விகிதத்தை இந்தியாவிலேயே அதிகளவில் தமிழ்நாடு கட்டுப்படுத்தி சாதனை புரிந்துள்ளது. மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவச்சுற்றுலா வர ஏற்ற இடமாக தமிழ்நாடு உள்ளது. இதையெல்லாம் மத்திய அரசின் புள்ளிவிவரங்களே சொல்கின்றன.
அப்படியென்றால் தமிழ்நாடு மாடலை இந்தியா வின் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதுதானே உண்மையான தரம் உயர்த்துதல்? இந்தியா முழுதும் ஒரே மாதிரி தேர்வு என சொல்லி அதைத் திணிப்பது ஏற்கெனவே The best ஆன தமிழ்நாட்டின் மருத்துவத்துறையை இருக்கிற தரத்திலிருந்து கீழிறக்கத்தான் செய்யும்.
உலகத்தில் எல்லா நாடுகளும் தங்களிடம் இருக்கிற தரத்தை உயர்த்துவதற்குத்தான் பாடுபடுவார்கள். ஆனால் இந்தியா தான் ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் சிறப்பாக உள்ள தரத்தை சீர்கெடவைப்பதற்கு முயற்சி செய்கிறது..!முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக