வியாழன், 11 மே, 2017

அகிலேஷ் யாதவ்: குஜராத் ராணுவ வீரர்கள் ஏன் வீரமரணம் அடைவதில்லை?

அகிலேஷ்குஜராத் ராணுவ வீரர்கள் ஏன் வீர மரணமடைவதில்லை என கூறிய அகிலேஷ் யாதவ்வின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அகிலேஷ் அண்மையில் காஷ்மீரில் இரு ராணுவ வீரர்களின் தலை பாகிஸ்தான் ராணுவத்தினரால் துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியது. இதையடுத்து நேற்று இந்திய ராணுவத்தைச் சேர்ந்த உமர் பயாஸ் என்பவரும் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் ராணுவத்தினர் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவம் பெரும் விவாதங்களைக் கிளப்பி வருகையில் அகிலேஷ் யாதவ்வின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. 
இதுகுறித்து இன்று பேசிய அகிலேஷ் யாதவ், 'உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தென் இந்தியா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்த செய்திகள் வருகிறதே, என்றாவது குஜராத்தைச் சேர்ந்தவர்கள் வீர மரணமடைந்த செய்தி வந்துள்ளதா?' என அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அகிலேஷின் கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பிரதமர் மோடியை தாக்கும் விதத்தில் அகிலேஷ் பேசியது சமூக வலைதளங்களில் சூடு பறக்கிறது .  tamiloneindia


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக