வியாழன், 11 மே, 2017

ஆங்கில வழிக் கல்வி தொடரும்! தமிழக அரசு பள்ளிகளில் தொடர்ந்து ஆங்கிலம்..

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடரும்!
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்ட வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளிகள் போல் அரசு பள்ளிகளிலும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக் கல்வி கிடையாது என, சில ஆசிரியர் சங்கங்களின் வாட்ஸ் அஃப் குழுக்களில் தகவல் பரவியது. இந்தத் தகவல் வேகமாகப் பரவியதால் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் இருக்குமா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்தது.

இந்தச் சந்தேகத்தை பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், “அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். பெற்றோர்கள் விரும்பும் பயிற்று மொழியிலே மாணவர்களைச் சேர்க்கலாம். அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம்” எனத் தெரிவித்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கியது. தற்போது சுமார் 3 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியை பயின்று வருகின்றனர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக