மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாகவும், அவர் அடக்கம் செய்யப்படும் போது கால்கள் இல்லாமல் தான் அடக்கம் செய்யப்பட்டார் என செய்திகள் பரவியது. பிரபல தமிழ் புலனாய்வு வார இதழ் கூட இது குறித்து எழுதி இருந்தது.
இந்நிலையில் தினகரனிடம் நடந்து வரும் விசாரணையில் ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்ட விவகாரம் அடிபடுவதாக கூறப்படுகிறது. டெல்லி காவல்துறையின் கிடுக்குப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது போயஸ் கார்டனின் பாதாள அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25000 கோடி ரூபாய் யாருக்கும் தெரியாமல் ஹவாலா வழியில் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது பணம் மற்றும் நகைகளை நாடுகடத்த தினகரனை வைத்து திட்டம் தீட்டிய சசிகலா போயஸ் கார்டனின் ரகசிய அறையில் இருந்த அத்தனையையும் கண்டெய்னர் லாரிகள் மூலம் கடல் வழியாக வெளிநாட்டுக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
போயஸ் கார்டனின் அந்த பாதாள அறையின் லாக்கர் ஜெயலலிதாவின் கால் ரேகைகளுடன் பயோமெட்ரிக் முறையில் லாக் செய்யப்பட்டிருந்ததாகவும், அதனை திறக்க வேண்டுமானால் ஜெயலலிதாவின் கால் ரேகை வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் கால்களை எடுக்க சசிகலா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த பணம் அனைத்தும் ஹவாலா மூலமாகவே நாடு கடத்தப்பட்டதாகவும், அதற்கு மூளையாக தினகரன் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறையில் உள்ள சசிகலாவிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக