புதன், 31 மே, 2017

பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை ... ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும், கொன்றால் ஆயுள் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ராஜஸ்தான் அரசுக்கு அம்மாநில ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை கொடுங்கள்: ராஜஸ்தான் ஐகோர்ட் பரிந்துரை ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தலைநர் ஜெய்ப்பூர் அருகில் ஹின்கோனியா என்ற மாநில அரசு நடத்தி வந்த மாட்டு தொழுகைகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பசுக்கள் கடந்த சில வருடங்களில் உயிரிழந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று நீதிபதி மகேஷ் சந்த் சர்மா தலைமையிலான அமர்வு ராஜஸ்தான் மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது.
மேலும், பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் நீதிபதி வலியுறுத்தினார். ”நேபாளம் ஒரு இந்து நாடு. அந்நாடு பசுவை தேசிய விலங்காக அறிவித்துள்ளது. இந்தியா விவசாயத்தை முதன்மையாக கொண்ட நாடு. இந்திய விவசாயத்தில் கால்நடை வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மாட்டு தொழுவங்களுக்கு அருகில் ஆண்டு தோறும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை நட வேண்டும்” என்று நீதிபதி கூறினார். இறைச்சிக்காக மாடு உள்ளிட்ட கால்நடைகளை சந்தைகளில் விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழ்நிலையில் ராஜஸ்தான் கோர்ட் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய பரிந்துரையை வழங்கிய நீதிபதி மகேஷ் இன்றே தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மாளிமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக