thetimestamil :மனுவேல்:
நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு
ஆதரவாகவும் இரயில் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக, பொய் வழக்கு போடப்பட்டு
சிறைப்படுத்தப்பட்ட நான்கு SUMS தோழர்கள் உட்பட 7 பேர் இன்று வரை சிறையில்
உள்ளனர்.
தோழர் வளர்மதி (Sums Valarmathi) திருச்சி பெண்கள் சிறையில் உள்ளார். அங்கு அவரும், தோழர் சுவாதியும் சிறை அதிகாரிகளின் ஆசியுடன், சிறைக் காவலர்களால் பலமுறை கட்டாயப்படுத்தி நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவை உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராக தோழர் வளர்மதியும், சுவாதியும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டனர். 3 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு, போலி வாக்குறுதிகளைக் கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடிவுக் கொண்டு வந்தபின்னர், சிறைத்துறை மீண்டும் பலவிதமான வன்முறையில் ஈடுபடத் துவங்கியது.
உண்ணாவிரதம் இருந்ததற்கு தண்டனை என்று கூறி, சிறைத் தொலைப்பேசியை பயன்படுத்தக் கூடாது, பி.சி.பி பணத்தை (அதாவது, அவர்களது சிறைக் கணக்கில் உள்ள பணத்தை) அவர்கள் பயன்படுத்துவதை தடுப்பது, பெற்றோருக்கு கடிதம் எழுத அனுமதி மறுப்பது, அடிப்படைத் தேவைகளான நேப்கின், சோப்பு, எண்ணெய் ஆகியவற்றை தர மறுப்பது என்று தொடர் சித்திரவதையில் சிறை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நீதித்துறை நடுவர்
(மாஜிஸ்ட்ரேட்) முன்பு அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, தோழர் வளர்மதி சிறையில் நடந்த வன்முறைகள் குறித்து நடுவரிடம் ஒரு மனு அளித்துள்ளார்.
அம்மனுவின் மீது எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்காத நீதித்துறை நடுவர் அந்த மனுவை அதே சிறைக்கு ஃபார்வர்ட் செய்துள்ளார்.
இந்நிலையில், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தோழர் வளர்மதியிடம் வந்துள்ள சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் ”இன்ஸ்ப்பெக்சன் நடக்க உள்ளது, அதனால் உன்னை மற்ற சிறைவாசிகள் இருக்கும் பொதுத் தொகுதிக்கு மாற்றப் போகிறோம்” என்று கூறியுள்ளனர். இன்ஸ்பெக்சன் நடைபெறும்போது தாங்கள் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கவில்லை என்று காட்டுவதற்காக இவ்வாறு ஒரு நாடகம் ஆட சிறைத் துறை திட்டமிட்டுள்ளதை அறிந்த தோழர் வளர்மதி வர மறுத்துள்ளார்.
உடனே, சிறைக் காவலர்கள் தோழர் வளர்மதியை அடித்து, கை கால்களை பிடித்து தூக்கிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்று மாணவிகள் மீது வன்முறை ஏவப்படுவதை கண்டு கோபமுற்ற மற்ற சிறைவாசிகள் “ஏன் இந்த பெண்களிடம் தொடர்ந்து இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள்?” என்று தட்டிக் கேட்டுள்ளனர். நிறைய சிறைவாசிகள் கூடி கேட்டவுடன், அடங்கிக் கிடந்த சிறைவாசிகள் ஒன்று கூடுகிறார்களே என்று பதட்டமான சிறை நிர்வாகம், சிறைக் காவலர்களைக் கொண்டு சிறைவாசிகள் மீது தடியடி நடத்தி அவர்களைக் கலைத்துள்ளது. தோழர் வளர்மதியும் கட்டாயமாக “உயர் பாதுகாப்புத் தொகுதிக்கு” இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒருபுறம், பாசிச நீதிமன்றம் தோழர்களுக்கு பிணை வழங்காமல் பிணை மனுக்களை தொடர்ந்து தள்ளுபடி செய்து வருகிறது.
இன்னொருபுறம், சிறைத்துறை தோழர்கள் மீது தொடர் வன்முறையை ஏவி வருகின்றது. என்ன செய்யப் போகிறோம்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக