சென்னை: புதிய கட்சி குறித்த அறிவிப்பை ஜூலை
மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று அவரது சகோதரர்
சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் ஆங்கில நாளிதழ்
ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வர
வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளதாக சத்தியநாராயண ராவ்
தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடுவது குறித்து முதற்கட்ட
ஆலோசனையை ரஜினி முடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில்
ரஜினி இணைவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த சத்திநாராயணா, ரஜினி அரசியலுக்கு
வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அரசியலில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே ரஜினியின் நோக்கம், கொள்கை என்று
அவர் தெரிவித்துள்ளார். எனவே ரஜினியின் அரசியல், தமிழகத்தில் புதிய
அத்தியாயமாக இருக்கும் என்று சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார்.( ரஜினிகாந்த் கைது ஒரு பழைய flaschback அரசியலுக்கு வரவிருக்கும் ஆளுமையின் ஹிஸ்டரி கொஞ்சம் தெரிவது அவசியம்)
ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு பொறுத்தமான கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் அவர் இணைய வேண்டும் என்று அந்த கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். இதேபோன்று, பா.ஜ.க அகில இந்திய தலைவரும் ரஜினி பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்று விருப்பமும், வேண்டுகோளும் விடுத்துள்ளார். இந்நிலையில் ரஜினி தனிக்கட்சி தான் தொடங்குவார் என்று அவரது சகோதரர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தினகரன் தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக