சென்னை தி.நகரில் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கத்திற்கு சொந்தமான காலி இடம் உள்ளது.இந்த இடத்தில் 33 அடி பொது சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும். அங்கு நடிகர் சங்கம் பிரமாண்ட கட்டடம் கட்ட சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளதாகவும், பொது சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கிய சிஎம்டிஏ, மாநகராட்சி அதிகாரிகளை கட்டிடம் கட்ட அனுமதி அளித்த ஆவணங்களை தாக்கல் செய்து நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தார்கள். விஷால் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
இன்று நேரில் ஆஜரான அதிகாரிகள் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்க பட்டதிற்காண ஆவணங்களை, வரைபடங்கள் என அனைத்தையும் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அப்போது சிஎம்டிஏ அதிகாரிகள் தரப்பில் அந்த இடத்தில் எந்த விதமான சாலையும் இல்லை என்று கூறினார்கள் .ஆனால் மனுதாரர் தரப்பு தான் கடந்த 50 ஆண்டு காலமாக அங்கு வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
இரண்டு தரப்பினரிடமும் முரண் பட்ட வாதம் எடுத்து வைக்கபட்டதால் .இதன் காரணமாக நேரில் சென்று ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் தரப்பில் வழக்கறிஞர் இளங்கோவனை வழக்கறிஞர் ஆணையராக நியமித்து உத்தரவிட்டனர்.நடிகர் சங்க இடத்தை ஆய்வு செய்து மே 29 ஆம் தேதிகுள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.அது வரை கட்டிடத்தின் அஸ்திவாரம் கட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் கட்டிடம் கட்டும் பணியை மேற்கொள்ள வேண்டாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள். -சி.ஜீவா பாரதி நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக