வியாழன், 4 மே, 2017

ஜிகே வாசன் பாஜகவுடன் பேரம் ... ராஜ்யசபா , மத்திய அமைச்சு ..

By: Raj சென்னை: ஓபிஎஸ்ஸை சேர்ப்பது, வாசனை வளைப்பது, திமுகவை மெகா கூட்டணி அமைக்க விடாமல் தடுப்பது என பாஜக படு மும்முரமாக களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் பாஜக கால் வைக்கவே முடியாது என எதிர்க்கட்சிகள் உச்சஸ்தாயில் பிரசாரம் செய்கின்றன. ஆனால் திராவிட மண்ணில் காலை வைத்தே தீரும் என கனகச்சிதமாக காய் நகர்த்துகிறது பாஜக.  அதிமுகவை துண்டு துண்டாக சிதைத்த கையோடு ஓபிஎஸ்ஸை பாஜகவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் ஓபிஎஸ்-க்குதான் எங்களது ஆதரவு என மீண்டும் தமாகா தலைவர் வாசன் தெரிவித்திருக்கிறார். உண்மையில் வாசனின் ஆதரவு பேச்சு என்பது பாஜகவில் ஐக்கியமாவதற்கான க்ரீன் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. வாசனைப் பொறுத்தவரையில் ராஜ்யசபா சீட் எங்கு கிடைக்கிறதோ அவர்களுடன் கை கோர்ப்பதில் உறுதியாக இருக்கிறார். தமிழகத்தில் நின்றுவிடுவதற்காக போராடும் பாஜகவோ கிடைக்கிற எந்த ஒருவாய்ப்பையும் நழுவ விடாமல் பார்த்து கொண்டிருக்கிறது.    அடிச்ச காசு நெறைய இருக்கு ஜாலியா செலவு பண்ணுங்க ...  நாட்டில் அசல் ஆண்டி இன்டியன் பண்ணையார் வாசன்தான்

அதனால் ராஜ்யசபாசீட்டும் அமைச்சர் பதவியும் வாசனுக்கு தர முன்வந்துள்ளதாம் பாஜக.
அதேநேரத்தில் திமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது பாஜக.

இதற்காகத்தான் சசிகலாவை ஆதரித்துவிட்டு திடீரென திமுகவுடன் கை கோர்க்கப் போன அதிமுக்கிய தலைவருக்கு குறிவைத்துவிட்டதாக செய்திகளை டெல்லி கசியவிட்டுள்ளது.
தமிழகத்தில் தலைவர்களை வளைப்பதிலும் வதைப்பதிலும் மும்முரமாக இறங்கிவிட்டது பாஜக என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக