புதுடில்லி: 'பான் கார்டு பெற, ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது, மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல்' என, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
'பான்' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை வழங்குவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நடந்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின் போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ஷியாம் திவான் கூறியதாவது: உலகில், நம் நாட்டை தவிர, வேறு எந்த நாட்டிலும், ஆதார் போன்ற முறை அமல்படுத்தப்படவில்லை.
பான் கார்டு வழங்க, ஆதாரை கட்டாயமாக்குவது, மக்களின் உரிமையை பறிக்கும் செயல்.ஆதார் எண்ணை கட்டாயமாக்கினால், ஒரு மனிதன், வாழ்நாள் முழுவதும், மின்னணு கண்காணிப்பில்தான் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
'ஆதார் எண் பெறுவது, மக்களின் விருப்பத்தை பொறுத்தது' என, ஆதார் அறிமுகப்படுத்தும் போதே தெரிவிக்கப்பட்டது. இப்போது, அதற்கு எதிராக, அரசின் முடிவு உள்ளது; அதனால், ஆதாரை கட்டாயபடுத்தக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார். தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக