ஞாயிறு, 21 மே, 2017

லெஸ்பியன் .. பெண்களின் கதையை பெண்கள் கூறும் .. பிலோ ஹேர் மவுத் Below her mouth


Karthikeyan Fastura : இரண்டு பெண்களுக்கு நடுவில் வரும் காதலை, காமத்தை,
மன சஞ்சலத்தை பற்றிய, உயிர்ப்போடு எடுக்கப்பட்ட ஒரு கனடிய திரைப்படம் Below her mouth. சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று வருகிறது.
ஒரு Porn படத்தின் அளவுக்கு எக்கச்சக்க பெண்களின் உறவுக்காட்சிகள் இருந்தபோதும் இதில் வரும் வசனங்கள், காட்சி அமைப்புகள் ரெம்பவும் உண்மையாக உயிரோட்டமாக இருக்கிறது. எங்கேயும் உடல்வேட்கையை தூண்டும் அளவில் இல்லவே இல்லை.
யாருடா இவன் இவ்வளவு துல்லியமாக நேர்த்தியாக பெண்களை காட்டியது என்று நினைத்துக்கொண்டே பார்த்தேன். படம் முடிந்தபிறகு தான் தெரிந்தது இது முழுக்க முழுக்க பெண்களால் பெண்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். இயக்குனர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என்று எல்லோருமே பெண்கள் என்று. ஒப்புக்கு ஒரு ஆண் கேரக்டர் வருகிறது அவ்வளவே.
இது மாதிரியான படங்கள் இன்னும் பக்குவத்தை கொடுக்கவல்லது. பெண்களின் வெளியை பெண்களே தான் பேச வேண்டும் என்பதை அழுத்தி சொல்கிறது.

Casting செம. Original Chemistry அதை அவர்களின் பேட்டி மூலம் தெளிவாக தெரிகிறது. படத்தை விட இவர்களின் நேர்காணல்கள் இன்னும் அருமை.
எரிக்கா லிண்டர்க்கு இது முதல் படமாம். பார்த்தா அப்படி தெரியவில்லை. செம கெத்தான உடல்மொழி.
கிளைமாக்ஸ்ஸில் வரும் அந்த இரண்டு வரி வசனம் தான் பஞ்ச்
"என்ன சொல்லிட்டு வந்தாய்?
உண்மையை சொன்னேன்."
அவ்வளவு தான் விசயமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக