/vinayaga.murugan.:
கிழக்கு உத்தரபிரதேசத்தில் மற்றும் மேற்கு பீகாரில் பரவலாக இந்த மொழி
பேசப்படுகிறது. சுமார் நாலுகோடி பேர் இந்த மொழி பேசுகிறார்கள்.
புள்ளிவிபரத்தை தெளிவாக எடுக்க முடியவில்லை. காரணம் பலர் பீகாரி மற்றும்
இந்தியுடன் கலந்து பேசுவதால். போஜ்பூரி மொழியில் நாவல்கள்
கவிதைகள் கூட வெளிவந்துள்ளன. இலக்கியத்தை விடுங்கள். போஜ்பூரி மொழியில்
எடுக்கப்படும் திரைப்படங்கள். ஒவ்வொன்றும் காவியம். நேற்று மூன்று
திரைப்படங்கள் பார்த்தேன். குண்டராஜ் ,த்ரிதேவ், காதர். அங்கு இரண்டு பெரிய
நடிகர்கள். நம்மூரு அஜீத், விஜய் போல கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்..
ஒருவர் கேசரிலால் யாதவ். இன்னொருவர் பவன்சிங். கேசரிலாலுக்கு நான்
ரசிகன்.போஜ்பூரி நடிகர்களின் நன்றாக நடனம் ஆடக்கூடிய நடிகர்களில் இவர்
முதன்மையானவர். உலகின் அழகான இளம்பெண்கள் நிறைந்த நாடு சீலே என்று சாரு
அடிக்கடி சொல்வார். அவருக்கு போஜ்பூரி பற்றி எதுவும் தெரியாது என்று
நினைக்கிறேன். அவர் ஒருமுறை மோனலிசா, அக்சரா குறிப்பாக ராணி சாட்டர்ஜி
போன்றோரின் நடனங்களை பார்க்க வேண்டும்.
தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் போன்று போஜ்பூரி படங்கள் பரவலாக உலகத்தின் கவனத்துக்கு வராமல் போஜ்பூரி மொழி பேசும் மக்களால் மட்டும் விரும்பி பார்க்கபடுகிறது. போஜ்பூரி பெண்கள் அழகாக இருந்தாலும் பிறமொழி படங்களில் அவர்கள் நடிப்பதில்லை. உலகத்தில் வேறு மொழிகளில் எந்த மாதிரி திரைப்படங்கள் வருகின்றன என்றெல்லாம் போஜ்பூரி இயக்குநர்கள் யோசிப்பதே இல்லை. அவர்களுக்கென்று தனிபாணி வைத்து படங்கள் எடுக்கிறார்கள். நேற்று நான் அடைந்த மகானுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. அதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் ஒரு போஜ்பூரி படத்தையாவது நீங்கள் யூட்யூபில் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக