ரூ.45 கோடி செல்லாத நோட்டு
வருமான வரித்துறை ஏற்க மறுப்பு
சென்னையில் சிக்கிய, 45 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை ஏற்று விசாரணை நடத்த, வருமான வரித்துறை மறுத்துவிட்டது.
சென்னை, கோடம்பாக்கத்தில், தண்டபாணி என்பவர் வீட்டில் இருந்து, 45 கோடி ரூபாய்
மதிப்பிலான, செல்லாத ரூபாய் நோட்டுகளை, போலீசார் பறிமுதல்
செய்தனர். இது தொடர்பாக, பைனான்சியர் கிலானி என்பவரிடம் விசாரணை
நடந்துவருகிறது. மேலும், வருமான வரித்துறை யினரையும், சென்னை போலீசார்
நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.
இது தொடர்பாக, வருமான வரித் துறையினர் கூறியதாவது:
செல்லாத ரூபாய்நோட்டுகளுக்காக, பிப்ரவரியில், மத்திய அரசு தனி சட்டம் இயற்றியுள்ளது.
அதன்படி, செல்லாத ரூபாய் நோட்டு வழக்கில், ரிசர்வ் வங்கி தான் நடவடிக்கை
எடுக்க வேண்டும். இது, எங்களை பொறுத்தவரை வெறும் காகிதம்;
அதை ஏற்க முடியாது. ரிசர்வ் வங்கியும், சென்னை போலீசாரும் தான், இதுபற்றி விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர் தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக