சென்னை: அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூடங்களில் 3 வண்ண சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழா ஒன்றில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: 2018-19ம் கல்வியாண்டு முதல், அரசுப் பள்ளிகளில் 3 வண்ணங்களில் சீருடைகள் மாற்றப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட், ஜே.இ.இ தேர்வை எதிர்கொள்ள பயிற்சி தரப்படும்.
ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களை மாவட்டம் தோறும் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி முடிவில் மதிப்பெண் பட்டியல் அறிவிக்கப்படாது என்று கல்வித்துறை அறிவித்து அதை செயல்படுத்தியுள்ளது. மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீருடையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக