வெள்ளி, 26 மே, 2017

இலங்கையில் பெருமழை மண்சரிவு 32 பேர் மரணம் 46 பேரை காணவில்லை! தேடுதல் பணிகள் தீவிரம்

கொழும்பு:நேற்று தொடங்கி பெய்து வரும் கனமழையினால் உண்டான வெள்ளப்பெருக்கின் காரணமாக இலங்கையில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். இலங்கையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது.  நேற்று துவங்கி இலங்கையில் பல பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பகுதிகளில் வேகமான காற்றும் மழையும் தொடர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக அந்நாட்டில் ஓடும் பெரும்பாலான நதிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் பணியில் இலங்கை பேரிடர் மேலாண்மை அமைப்பு ஈடுபட்டுள்ளது.
இந்த மீட்பு பணிகளில் இலங்கையின் வான்படை மற்றும் கடற்படை ஈடுபட்டு வருகின்றன.< இந்த கனமழையால் உண்டான வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக 23 பேர் பலியாகினார். நாட்டின் தென்பகுதி மலைப்பகுதிகளான காலே, கெகாலே, ரத்னபுரா, கலுதார, மதாரா, ஹம்பந்தந்தோட்டா ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக