ஞாயிறு, 28 மே, 2017

பத்திரிகையாளர் அன்பழகன் மீது 30க்கு மேற்பட்ட வழக்குகள்... RTI மூலம் ஊழல்களை வெளியே கொண்டு வருவதால் ..

Special Correspondentஅரசியல்வாதிகள் ஊழலைகளை மட்டுமில்லை அதிகார வர்க்க மற்றும் செய்தி நிறுவனத்தின் ஊடே விளயாடும் ஊழல்கள் குறித்தும் RTI ஆதாரத்துடன் வெளியுடுபவர் பத்திரிக்கையாளர் அன்பழகன்.
இதன் காரணமாக பல தரப்பட்ட எதிர்ப்பை பெற்றுள்ள இவர் மீது முதலில் ஒரு வழக்கை பதிவு செய்த காவல் துறை, பின்னர் ஓன்றன் பின் ஒன்றாக பத்திரிக்கையாளர் அன்பழகன் மீது இதுவரை கீழே தரப்பட்ட வழக்குகள் தவிர 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கிறது.
அனைத்து வழக்குகளிலும் அடிப்படையான குற்றச்சாட்டு கொலை மிரட்டல் விடுத்தார் என்பதே. மற்றொரு குற்றச்சாட்டு பணம் பறிக்கும் நோக்கத்தில்., இத்தனை பேரிடம் பணம் பறித்தவரின் வீட்டின் நிலைமை செழிப்பாக இருந்து இருக்க வேண்டும் தானே.. ஆனால் மிகவும் எளிமையாக உள்ளது அவரின் இல்லம்.



Picture thanks A.Shankar இது சம்பந்தமாக பத்திரிகை சுதந்திரம் வேண்டி நீண்ட நெடிய போராட்டம் நீதிமன்றத்திடம் நடத்திய சவுக்கு ஆச்சிமுத்து ஷங்கர் முன் வைக்கும் கேள்விகள் :
அனைத்து வழக்குகளிலும் புகார் அளித்தவர்கள் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் என்பதை காண முடியும். ஒரு பத்திரிக்கையாளரின் மீதே இத்தனை பொய் வழக்குகளை போட்டு அலைக்கழிக்க முடியுமென்றால், சாதாரண மனிதர்களின் நிலைமை?
அமைச்சர் வேலுமணியோ, அல்லது வேறு யாராவது உத்தரவு போடட்டுமே., முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடும் காவல் துறை அதிகாரிகளுக்கு மனசாட்சி எங்கே போனது?
கொஞ்சமும் தயக்கமில்லாமல் இப்படி பொய் வழக்குகளை பதிவு செய்கிறார்கள் என்றால், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று இந்த காவல்துறை அதிகாரிகளுக்கு இருக்கும் துணிச்சல்தானே?
Special Correspondent
இப்படி பொய் வழக்கு போடும் காவல்துறை அதிகாரிகள், தங்கள் மனைவி மீதோ, பிள்ளைகள் மீதோ அமைச்சர் சொன்னார் என்பதற்காக பொய் வழக்கு போடுவார்களா? தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வெறியைத் தவிர இத்தகைய செயலுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
இத்தைனை அநியாயம் நடந்தும், இந்த விவகாரம் குறித்து எதுவும் எழுதாத இதர பத்திரிக்கையாளர்களே காவல்துறையை விட மிகப்பெரிய குற்றவாளிகள் என்று சமூகம் பேசாதா?
காவல்துறையின் சட்ட மீறலும், அயோக்கியத்தனமுமே கண்டிக்கப்பட வேண்டியது. விமர்சிக்கப்பட வேண்டியது.
ஆனால் இது எதுவுமே தெரியாதது போல கள்ள மவுனம் காக்கும் பத்திரிக்கையாளர்கள், காவல்துறை அதிகாரிகளை விட மோசமானது என்றும் அவர்களின் அமைதி, காவல்துறை அதிகாரிகளின் அயோக்கியத்தனதுக்கு துணை பாவத்துக்கு ஒப்பானது என்றும் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட அன்பழகன் மனைவியோ தனது கணவரை உயிருடன் விடுவார்களா சிறையிலே ராம்குமார் போல கொன்று விடுவார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னயில் பத்திரிகையாளர் அன்பழகனுக்கு எதிராக அங்கே அங்கே தீடிர் தீடிர் என முளைக்கும் போஸ்டர், இவர் கைதின் பின்னால் மறந்து இருக்கும் அரசியல் சதியை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பரவலாக பகிரப்பட்டு உள்ளது.
நடிகை குஷ்பு கற்பு பற்றிய விஷயத்தை பேசினார் என்பதற்காக அவர் மீதும் இது போல 20க்கு மேற்பட்ட வழக்குகள் புனையப்பட்ட அவர் அசராமல் உச்சநீதிமன்றம் சென்று அத்தனை வழக்குகளை பொடி பொடி ஆக்கினார் என்ற உண்மையை வழக்கு பதியும் முன்னர் காவல்துறை கவனத்தில் வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் தரப்பில் அறிவுறுத்தி உள்ளார்கள்.
ஏற்கனவே World press freedom மதிப்பீட்டில் சர்வேதேச தரத்தில் இந்தியா ஊடகம் தரம் குறைந்து 136 /180 இடத்திலே தள்ள படுகிறோம். அதாவது நமக்கு முன்னாள் 135 நாடுகளில் நம்மை விட பத்திரிக்கை சுதந்திரம் இருக்கிறது. ஆனால் நமக்கு பின்னால் வெறும் 44 நாடுகள் மட்டுமே. இந்தியாவின் ரேங்க் குறைந்து வரும் வேளையில்..
இது போல பத்திரிகை கருத்து சுதந்திரம் நசுக்கும் காரணத்தினால் இந்த விஷயத்தை சர்வதேச அமைப்புக்கு எடுத்து splco.me சென்றுள்ளது, காவல்துறையின் இத்தகைய செயல் இந்திய மதிப்பை குறைக்கும் என்று இதன் எடிட்டர் தனது த்விட்டேர் பதிவில் தெரிவித்து உள்ளார்.   /tamil.splco.me/samugam/samugam07.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக