வியாழன், 11 மே, 2017

ரூ.25 சேவை கட்டணம் ! எஸ்.பி.ஐ. வங்கி அளித்த அதிர்ச்சி: ஒவ்வொரு முறைக்கும்

எஸ்பிஐ ஏடிஎம்-மில் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் 25 ரூபாய் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. எஸ்.பி.ஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் அதன் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும்போது மட்டுமே சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சேவைக் கட்டணங்களை மாற்றி புதிய அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டது. இதன்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு முறை எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போதும் 25 ரூபாய் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும். மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுக்கும்போது சேவைக் கட்டணம் மாறுகிறது. 4 முறைக்கு மேல் பணம் எடுக்கும்போது, ஒவ்வொரு முறையும், கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையில் பணம் எடுக்கும்போது சேவை வரியுடன் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்"

4 முறைக்கு மேல் எஸ்பிஐ ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் சேவைவரியுடன் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இதுவே பிற வங்கிகளின் ஏ.டி.எம். எனில் சேவை வரியுடன் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். வங்கிக் கிளைக்குச் சென்று பணம் டெபாசிட் செய்யும்போது, 10 ஆயிரம் ரூபாய் வரை டெபாசிட் செய்தால் கால்சதவீதம் அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இது குறைந்தபட்சம் 2 ரூபாயாகவும் அதிகபட்சம் 8 ரூபாயாகவும் சேவை வரியுடன் வசூலிக்கப்படும். வங்கிக் கிளைக்கு சென்று 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கும்போது, மொத்த தொகையில் 2.5 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். இது குறைந்தது 6 ரூபாயாக சேவை வரியுடன் வசூலிக்கப்படும். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் சேவைக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இண்டர்நெட் பேங்கிங், யுபிஐ (UPI), ஐயுஎஸ்எஸ்டி (IUSSD) மூலம் ஐஎம்பிஎஸ் (IMPS) முறையில் பணம் அனுப்புவதற்கு, ஒரு லட்ச ரூபாய் வரை, 5 ரூபாயும், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் 2 லட்ச ரூபாய் வரை 15 ரூபாயும், 2 லட்ச ரூபாய்க்கு மேல் 5 லட்ச ரூபாய் வரை எனில் 25 ரூபாயும் சேவை வரியுடன் வசூலிக்கப்படும். கிழிந்த மற்றும் அழுக்கு நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 20 நோட்டுகளை வரை, 5 ஆயிரம் ரூபாய் மதிப்பு எனில் கட்டணம் எதுவும் இல்லை. 20 நோட்டுகளுக்கு மேல் எனில் ஒவ்வொரு நோட்டுக்கும் சேவை வரியுடன் 2 ரூபாய் வசூலிக்கப்படும். 5 ஆயிரம் ரூபாய்க்கு அதிகம் எனில், ஒரு நோட்டுக்கு 2 ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய்க்கு 5 ரூபாய் என கணக்கிட்டு இதில் எது அதிகமோ அந்த தொகை சேவை வரியுடன் வசூலிக்கப்படும்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக