Prakash JP
": உலக மகா யோக்கியன்"..ஓ. பன்னீர் செல்வத்தின் இன்சூரன்ஸ் ஊழல்.....
ஜெயலலிதா மரணமடைந்த 15 நாட்களுக்குப் பிறகு பன்னீர்செல்வம் முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதுதான் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம். 2011 முதல் 2016 வரை இந்தத் திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வசம் இருந்தது. 1.32 கோடி பேருக்கான இந்தத் திட்டத்தை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே நேரடியாக நடத்த முடியாதபடி ஏகப்பட்ட குளறுபடிகள். அதனால், அந்தத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உள் குத்தகைக்கு டி.டி.கே.ஹெல்த் கேர் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது.

அதன்பிறகு 2016-ல் மீண்டும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த டெண்டர்
விடப்பட்டது. ஆனால், இந்த முறை டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள், 437
ரூபாய் இருந்த பிரீமியத் தொகையை உயர்த்தி ஆயிரம் ரூபாயாகக் கேட்டன. அதன்
பின்னணியில் டி.டி.கே.ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தான்
இருந்தனர். ஆனால், சுகாதரத் திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது இதற்கு
ஒத்துக்கொள்ளவில்லை. பிரிமியத் தொகையைத் குறைக்கவிட்டால், டெண்டரை ரத்து
செய்து விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதன்பிறகு ஒரு வழியாக
பிரிமியத் தொகை 699 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. அதாவது முன்பிருந்த
தொகையைக் காட்டிலும் 200 ரூபாய் அதிகம். ஒருவழியாக இந்தத் தொகைக்கு
ஒத்துக்கொண்டு 2017 ஜனவரி 11-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது
1.32 கோடி அட்டைகளைக் கணக்கிட்டு 808 கோடி ரூபாயை உடனடியாகக் கொடுக்க
வேண்டும் என்று அந்த நிறுவனம் கேட்டது. அதற்கு முதல்வர் பன்னீர்செல்வமும்
ஒத்துக்கொண்டார்.
ஆனால், திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது, ‘உடனடியாகக் கொடுக்க முடியாது. 25 சதவிகிதம் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது கொடுக்க முடியும். அதன் பிறகு மீதித் தொகையை மூன்று மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க முடியும்” என்றார். ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம் திட்ட இயக்குநரை சமாதானப்படுத்தி உடனடியாகக் கொடுத்து விடலாம் என்றார். அதன்படி 808 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரித்த திட்ட இயக்குனரக அதிகாரிகள், “ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள், தொகையைப் பிரித்து மூன்று மாத தவணையில் வாங்கிக் கொள்ளலாமே” என்று யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன பதில், “முதல்வர் ஓ.பி.எஸ் உடனடியாக தனக்கான கமிஷன் தொகை 240 கோடியைக் கேட்கிறார். அதனால், நாங்கள் முழுத் தொகையை இப்போதே வாங்கினால் தான் அவருக்கான கமிஷனைக் கொடுத்துவிட்டு, எங்கள் வேலையை ஆரம்பித்து, நாங்களும் லாபம் பார்க்க முடியும்” என்று சொல்லி அதிர வைத்துள்ளனர்.
நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், பரிசுத்தமான பன்னீரின் யோக்கியதைக்கு ஒரு சாம்பிள்.
தினகரன் அரசு முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக