வியாழன், 4 மே, 2017

இணையத்தில் இந்திய மொழிகளில் தமிழ்தான் முதலிடம் .. 1996 திமுக ஆட்சிலிருந்து +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் கல்வியை ..

Prakash JP: Image may contain: textதிராவிட ஆட்சியில் தமிழ் அழிந்துவிட்டது... என கூப்பாடுபோடுபவர்கள் கவனத்துக்கு...
உலக அளவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில், ஹிந்தியை பின்னுக்கு தள்ளி, தமிழ் முதலிடத்தில் உள்ளது.. ஹிந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்துவருவதால், தமிழின் பயன்பாடு இன்டர்நெட் காலத்தில் அதிகளவில் வளர்ந்துள்ளது..  இதற்கு முக்கிய காரணம், துவக்கத்தில் பல்வேறு தமிழ் எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருந்ததால், இணைய பயன்பாடுகளில் சிக்கல்  குழப்பங்கள் தோன்றியது.. 2010 திமுக ஆட்சிகாலத்தில், முதல்வர் கலைஞர், "தமிழ் யூனிகோட்" எழுத்துருவை, பொதுவான எழுத்துருவாக அதிகாரப்பூர்வ அறிவித்ததால், இணையத்தில் தமிழின் பயன்பாடு சுலபமாகியது.. பரவலாகியது..
இன்றைய நிலையில், அனைத்து தமிழரையும் இணைக்கும் பாலமாக தமிழ் யூனிகோட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, தமிழ்ப் பயன்பாடு இணையத்திலும், கம்ப்யூட்டர்களிலும் பெரும் அளவில் பெருகி உள்ளது. கம்ப்யூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடங்களை அனைத்து தமிழ் மாணவர்களும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் தமிழ் வழியில் கம்ப்யூட்டர் பாடங்களைக் 1996 ஆண்டிலிருந்து கற்றுக் கொடுக்கத் தொடங்கியது அப்போதைய திமுக அரசு.. முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக