திங்கள், 15 மே, 2017

தலித் இளைஞர் ஜெயராம் காவல் நிலையத்தில் அடித்து படுகொலை .. 10.05.2017 கிருஷ்ணகிரி காவல் ....

Image may contain: 10 people, crowd and outdoorImage may contain: 14 people, people sitting, crowd and outdoorImage may contain: 14 people, crowd and outdoorகிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த சேர்ந்த தலித் இளைஞர் ஜெயராம் என்பவரை போலீஸ் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக அடித்து சித்திரவதை செய்ததினால் கடந்த 10.05.2017 அன்று இறந்துபோய் உள்ளார்.இது அப்பட்டமான காவல் படுகொலை.நாயக்கர் சமூகத்தை சேர்ந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவி செய்தார் என்கிற குற்றச்சாட்டில் அழைத்து செல்லப்பட்ட ஜெயராம் இழுபறி நிலையில் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருந்து போனார்.கடந்த வருடம் பிப்ரவரி 2016 மாதம் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர் காதல் தம்பதியினர்.இருவருக்கும் ஜெயராம் திருமணம் செய்து வைத்து இருந்து இருக்கிறார்.இந்நிலையில் இந்த வருடம் 1.04.2017 அன்று பெண் வீட்டார் என் திருட்டு திருமணம் செய்து கொண்டால் என்றும்,மீட்டு கொடுங்கள் என்று புகார்.இந்த புகாரில் ஜெயராம் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை.ஆனால் போலீஸ் சட்டத்திற்கு புறம்பாக இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சுமார் 30 தடவைக்கு மேல் ஜெயராமை காவல் நிலையத்திற்கு வரவைத்து விசாரனை என்கிற பெயரில் கடும் மனா உளைச்சலை போலீசார் கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில் 10.05.2017 அன்று காவல் நிலையத்தில் ஜெயராமை தளி காவல் நிலைய போலீஸ் கடுமையாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தனர்.
Image may contain: 4 people
Image may contain: 9 people, people standing, tree and outdoor சம்பவம் அறிந்து 12.05.2107 அன்று ஜெயராமின் சடலம் இருந்த ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சென்றேன்.அங்கு 500 க்கும் மேற்பட்ட மக்கள் இருந்தனர்.சுமார் 150 போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தனர்.எனக்கும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் என்பவருக்கும் கடும் வாக்குவாதம்.அதாவது 174 சந்தேக மரணம் என்பதினால் அதுவும் காவல் நிலைய மரணம் என்று வருவதினால் 176 நீதி மன்ற விசாரணைக்கு வழக்கு என்று பதிவு செய்து இருந்தனர்.அதற்கு நான், இது இது சந்தேக மரணம் அல்ல.கொலை என்று ஜெயராமின் தந்தை நேரடியாக குற்றம் சாட்டி புகார் கொடுத்து உள்ளார்.ஆகவே கொலை வழக்கும் எஸ்.சி.எஸ்.டி,வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றேன்.அதற்கு அந்த ரோகித் நாதன்,காவல் நிலைய கொலை என்றால் நீதி மன்ற விசாரணை என்று விளக்கம் கொடுத்தார்.உண்மைதான் ஆனால் இது சாதிய படுகொலை என்கிறேன்.அதுவும் இல்லாமல் அரசு ஊழியர் தலித்துகளிடம் வன்கொடுமையால் ஈடுபட்டால் எஸ்.சி.எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு சட்டம் போட வேண்டும்.போலீஸ் என்பவர் அரசு ஊழியர்தானே என்றேன்.அப்படி சட்டத்தில் எங்கவும் இல்லை என்று அவர் கூற சட்ட புத்தகத்தை கொண்டு வந்து படிக்கவும் என்றேன்.படித்து விட்டு நான் ஐ.பி.எஸ்.படித்து இருக்கேன்.இது எனக்கு தெரியும் என்று கூற, உங்கள் ஈகோவை காட்ட வேண்டாம் சட்டப்படி வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றேன்.நீங்கள் சத்தமாக பேசுவது எனக்கு பிடிக்கவில்லை என்று கூற,நீங்கள் இப்படி மசமச என்று நிர்ப்பது கூட எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினேன்.ஹலோ நீங்கள் வந்துதான் இங்கு பதட்டம் அதிகரித்து இருக்கிறது.சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகிறீர்கள் என்று மிரட்ட இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் வேறு எங்காவது வைத்து கொள்ள வேண்டும்.ஜவுளி கடை விளம்பரத்திற்கு ரோஸ் கலர் நோட்டீஸ் கொடுப்பது போன்று எங்கள் மக்களிடம் 176 பிரிவினை நகல் எடுத்து கொடுக்கிறிங்க? போய் ஒழுங்கா சட்டத்தை படியுங்கள் என்றேன்.இளைஞர்கள் பெரும் திரளாக போலீஸ் மீது கோபத்தை காட்ட அங்கிருந்து அந்த அதிகாரி இடத்தைவிட்டு வெளியேறினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தோழர்கள் கணியமுதன்,நந்தன்,சக்திவேல்,பாண்டியன்,சிவா உள்ளிட்டோர் அர்ப்பணிப்புடன் போராடினார்கள்.நீதி மன்றத்தில் போலீஸ்க்கு எதிராக மட்டும் அல்ல,நீதி மன்ற நீதிபதிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்ய முயன்று வருகிறோம் Vincent Raj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக