வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் யமுனை பாவக் கணக்கு ! Will take 10 years to restore river bank hit by Sri Ravi Shankar event, panel tells NGT

பத்தாண்டுகளில் இந்த பாதிப்பை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வேலையையும் நிபுணர் குழு கூறுகிறது. முன்னதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த நால்வர் குழு, வாழும் கலை கம்பெனியிடம் யமுனை பழுது பணிகளுக்காக 100 கோடி ரூபாயை இழப்பீடாக கேட்டிருந்தது.
கடந்த 2016-ம் ஆண்டில் கார்ப்பரேட் சாமியார் டபுள் ஸ்ரீ ரவிசங்கர் கம்பெனியார், யமுனைக் கரையில் நடத்திய வாழும் கலை மேளாவின் ‘சாதனை’ தற்போது வெளி வந்திருக்கிறது.
யமுனைச் சமவெளியில் இவர்கள் நடத்திய மேளாவின் பாதிப்பால் அழிந்து போன சுற்றுச்சூழலை மீட்டெடுக்க பத்தாண்டும், 42 கோடி ரூபாய் செலவுக் ஆகுமாம். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்த அழிவுக் கணக்கு இடம்பெற்றுள்ளது.
“தோராயமாக 300 ஏக்கர் சமவெளி நிலம் யமுனைக் கரையின் வலது புறத்திலும், கிழக்கத்திய கரையில் சுமார் 120 ஏக்கர் நிலமும் பல்வேறு அளவுகளில் சுற்றுச்சூழல் அழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்து பௌதீக ரீதியான மீட்புக்கு சுமார் 29 கோடியும், உயிரியில் ரீதியான மீட்புக்கு 13 கோடி ரூபாயும் செலவாகும். இவற்றை நிறைவேற்ற பத்தாண்டுகள் தேவைப்படும்” என்கிறது அந்த அறிக்கை.


இந்த மதிப்பீடு தோரயமானதுதான், விரிவான ஆய்வுக்கு பின்னரே சரியான மதிப்பீடு தெரியவரும் என்றும் அந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த குழுவிற்கு மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலர் சசி சேகர் தலைமையேற்றார். நல்ல வேளை இவர் ஒரு ‘இந்து’வாக இருக்கிறார், இல்லையேல் இது பாகிஸ்தான் சதி என்றிருப்பார்கள். மேலும் இக்குழுவினர் பிரம்மாண்டமான மீட்பு நடவடிக்கைகளை துவக்கினால்தான் யமுனை சமவெளியின் இழப்புக்களை சரிசெய்ய முடியும் என்கின்றனர்.
இந்த அறிக்கை வெளிவந்த பிறகு டபுள் ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை கம்பெனி சார்பாக கேதர் தேசாய் எனும் செய்தித் தொடர்பாளர் சில பொன்மொழிகளை அருளியிருக்கிறார்.
“ இந்த அறிக்கை எங்களுக்கு கிடைப்பதற்குள் ஊடங்களுக்கு கிடைத்திருக்கிறது. இது எதிர்பார்த்ததுதான், ஆரம்பத்திலேயே தீய நோக்கத்தோடு எங்களை அழிக்க நினைத்தவர்களின் நடவடிக்கைகள் தெரியாமலில்லை. நாங்கள் ஒரு சசித்திட்டத்திற்கு பலியாக்கப்பட்டிருக்கிறோம். இறுதி வரை போராடி உண்மையை வெளிக் கொணர்வோம்”, என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் கேதர் தேசாய். மேலும் வாழும் கலையின் சட்டப் பிரவுக் குழு இந்த அறிக்கையை படித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யும் என்றும் கூறுகிறார் தேசாய்.

உண்மையில் யமுனை மேளாவை நடத்துவதற்குத்தான் வாழும் கலை குழுவினர்தான் பெரும் சதிகளை செய்து பணத்தை இறக்கி ஆவண செய்தனர். தேசிய பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவுகளை ஏற்கமாட்டோம் என சவடால் அடித்த ரவி சங்கரின் பலம் மோடியின் வருகையின் பின்னே ஒளிந்திருந்தது. அதன்படி மோடி வந்தார். வாழும் கலை அழித்த யமுனை பேரழிவை ரசித்து விட்டுச் சென்றார். இதே குற்றத்தைத்தான் கோவையில் ஜக்கி வாசுதேவ் மோடியை வரவழைத்து செய்தார்.
பா.ஜ.க-வின் ஆசி இருப்பதால் 2016-ல் வாழும் கலை கம்பெனி மூன்று நாள் நடத்திய உலக கலாச்சார நிகழ்வை தடை செய்ய முடியாமல் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் திணறியது. பிறகு ஐந்து கோடி ரூபாயை சுற்றுச்சூழல் இழப்பீட்டிற்கான முன்பணமாகக் கட்டச் சொன்னது. பிறகு எழுவர் அடங்கிய கமிட்டியை நியமித்தது.
யமுனைக் கரை படுகையை இந்த மூன்று நாள் விழா ஒட்டுமொத்தமாக அழித்திருக்கிறது என்கிறது நிபுணர் குழுவின் அறிக்கை. இதை மீட்கும் பணி என்பது மனித, பொருள், நிதி வளங்களை உள்ளடக்கி நெடுங்காலம் செய்ய வேண்டிய பணியாக இருக்கிறது என்றும் கூறுகிறது.
ரவிசங்கர் கம்பெனி ஏற்படுத்திய அழிவுகளுக்கு காரணங்கள் என்ன?
புல்வெளி, பசுமைத் தாவரங்களை அழித்தது, நிலத்தை பல்வேறு காரணங்களுக்காக வெட்டி சீர்குலைத்தது, மேடை மற்றும் இதர தற்காலிக கட்டுமானங்கள், தற்காலிக படிகள், பாலங்கள், சாலைகள், சாலை இணைப்புக்கள், யமுனை ஆற்றின் கால்வாய்களை தடுத்து நிறுத்துவது…இவையெல்லாம் அறிக்கை கூறும் அக்கிரமங்களின் பட்டியல்!

யமுனைச் சமவெளியில் செய்யப்பட நாசங்களைச் சரி செய்ய 10 ஆண்டுகள் ஆகும்
இதன் மூலம் யமுனை படுகையின் சுற்றுச்சூழல் பெருமளவு சீர் குலைந்துள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகறது.(Further, it said, these activities have led to “change in topography and habitat diversity, loss of waterbodies and wetlands, loss of floodplain vegetation and biodiversity, changes in substrata – nature of soil, consolidation and compaction, toxic substances and degradation and loss of ecosystem functions”.)
இந்தப் பிரச்சினை குறித்து பசுமைத் தீர்ப்பாயத்திற்கு முன்பாகவே பொதுநல வழக்கு தாக்கல் செய்த யமுனை ஜியே அபியான் குழுவைச் சேர்ந்த மனோஜ் மிஷ்ரா, “இறுதியில் இந்த அறிக்கை மக்களுக்கு கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி. யமுனைப் படுகையை மீட்பதும், சரி செய்வதும் உடனடியாக செய்யப்படவேண்டும்.  அப்போதுதான் மழைக்காலங்களில் பெய்யும் மழை நிலத்தடி நீராக சேமிக்கப்படும். இது கடந்த வருடம் நடக்கவில்லை” என்கிறார்.
பத்தாண்டுகளில் இந்த பாதிப்பை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வேலையையும் நிபுணர் குழு கூறுகிறது. முன்னதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த நால்வர் குழு, வாழும் கலை கம்பெனியிடம் யமுனை பழுது பணிகளுக்காக 100 கோடி ரூபாயை இழப்பீடாக கேட்டிருந்தது.
இருப்பினும் இதை ஒரு மானப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அப்படி ஒரு அழிவை நிகழ்த்தவில்லை என்று ரவிசங்கர் கூடிய சீக்கிரமே அரசையும் ஏற்கச் செய்வார். அல்லது யமுனையில் செடி கொடி நட சில கோடி ரூபாய் பிச்சை அளிப்பதாக கூறி முடிக்க பார்ப்பார்.
மோடி கலந்து கொண்டு ஆசீர்வதித்த நிகழ்வு என்பதால் ரவி சங்கர் எனும் கார்ப்பரேட் சாமியார பக்தர்கள் கொடுக்கும் காசுக்கு மேலேயே கூவலாம்.
செய்தி ஆதாரம் :  வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக