திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்களின் கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பணியாற்றிய பல இடங்களில் சர்ச்சைவாதியாகவே இருந்துள்ளார்.
பக்தர்களை அடித்தவர்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முல்லை பெரியாறு அணை பிரச்னை வெடித்ததில் சபரிமலை ஐயப்பன் கோயில் சென்ற தமிழக வாகனங்கள் மீது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்தது பிரானூர் எல்லையில் தமிழக பக்தர்கள் சாலை மறியல் செய்தனர். அப்போது, தென்காசியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய பாண்டியராஜன் ஐயப்ப பக்தர்களை தடியடி செய்து விரட்டினார். கேரளாவிலும் அடிக்கிறார்கள், தமிழ்நாட்டிலும் அடிக்கிறார்கள் என்று தமிழக பக்தர்கள் கதறியது வரலாறு..... மாமூல் வருமானம் தந்த ருசி பாண்டியராஜன் முகத்தில் தெரிகிறது
சப் இன்ஸ்பெக்டருடன் தகராறு
அதே போல செங்கோட்டையில் பணியாற்றிய திலீபன் என்ற உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் இவருக்கும் கைகலப்பு நடைபெற்றது. இதற்காக துறைரீதியாக அவர் மீது விசாரணை நடைபெற்றுள்ளது.
தேர்வில் முறைகேடு செய்து பதவி பெற்றதாக புகார்
“பாண்டியராஜன் TNPSC தேர்வில் முறைகேடு செய்து பதவி பெற்ற 83 பேரில் ஒருவர். வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்இருக்கிறது” என்பதும் குறிப்பிடத்தக்கது. thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக