ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

தமிழகத்தின் இன்றைய நிலை ? CM பழனிச்சாமியை சந்திக்க PM மோடி மறுப்பு ...ஒரு பினாமியை சந்திக்க மறு பினாமி மறுப்பு ?

எடப்பாடியின் எடுபடாத டெல்லி பயணம்!
டெல்லியில் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று, மார்ச் 22ஆம் தேதி மாலையே டெல்லிக்குப் புறப்பட்டு சென்று விட்டார்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய பழனிசாமியைச் சில முக்கியமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள். நிதி ஆயோக் கூட்டத்தில் பேசுவதற்கான தரவுகளை தயார்செய்த பழனிசாமி, ஒரு சில அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பிறகு பிஜேபி அமைச்சர்கள் சிலரைச் சந்திக்க நேரம் கேட்டுக் காத்திருந்தார். வெங்கய்யா நாயுடுவிடம் தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து பேச நேரம் கேட்டுக் காத்திருந்த பழனிசாமிக்கு, வெங்கய்யா நாயுடு நேரம் ஒதுக்கவில்லை.
மறுநாள் இன்று காலை டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் பேசியவர், விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வாங்கிக்கொண்ட பிறகு நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட பழனிசாமி, “விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்னைக்கு நீண்டகால தீர்வாக அமையும். இலங்கை வசமுள்ள 133 படகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தீர்வு, பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு ஆகிய தேர்வுகளை மத்திய அரசு கட்டாயமாக்கக் கூடாது. நீட் பொது தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். எரிபொருள், உரம், உணவுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துவதை ஏற்க முடியாது. பயிர்க் காப்பீட்டு தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடி வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1,882 கோடி உதவித்தொகையை உடனடியாக ஒதுக்கித் தர மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” என நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கைகளை முன்வைத்துப் பேசி முடித்தார்.


இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியைச் சந்திக்க அவரிடம் நேரம் கேட்டு காத்திருந்தார். தமிழக அரசியலில் நடந்து வரும் பல்வேறு அசாதாரண நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தச் சந்திப்பை பயன்படுத்த நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் ஒரு நாள் முன்னதாக சென்றும் பிரதமர் மோடி பழனிச்சாமியைச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. நிலைமை இப்படியிருக்க பழனிசாமி நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும் சென்னைக்கு கிளம்ப மார்ச் 23 இரவு 8.30 மணிக்குச் செல்லும் விமானத்திற்கு பயணச் சீட்டு எடுத்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஏன் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லையென்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம்... “எடப்பாடி பழனிசாமியை முன்பு சந்திக்க நேரம் ஒதுக்கவுள்ளதாகவே சூழல் அமைந்திருந்தது. ஆனால், பின்னாளில் கடந்த இரண்டு நாள்களாக டெல்லியில் தினகரனிடம் நடந்து வரும் விசாரணை, தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் என எல்லாமே பிஜேபியை மையம் கொண்டு இருப்பதாகத் தமிழக மீடியாக்கள் முதல் , நேஷனல் மீடியாக்கள் வரை எழுதி வருகின்றன. ஆதலால் இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தால் தேவையில்லாத விமர்சனங்கள் எழும் என்று மோடியின் நெருங்கிய வட்டாரத்தில் பேசியிருக்கிறார்கள். அதற்கெல்லாம் மோடி ஒன்றும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் எடப்பாடியை மோடி சந்திப்பதாகப் பத்திரிகையில் வெளியான செய்திகள் மற்றும் பழனிசாமி மூவ்களை கவனித்து வந்த அமித்ஷாவின் முக்கியமான ஆதரவாளர் ஒருவர் இரண்டு நாள்கள் முன்பு அவசரமாக ஒரு கோப்பை அனுப்பியிருக்கிறார். அந்தக் கோப்பில் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் பழனிசாமி, கூவத்தூர் அசைன்மெண்ட்டில் சசிகலாவின் முக்கியப் அசைன்மெட்டில் இருந்தவர். சசிகலாவின் சாய்ஸான இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவரின் மேல் தமிழகத்தில் நல்ல பெயர் இல்லையென்று குறிப்புகள் அடங்கிய கோப்பை அனுப்பியதும் மோடி உஷாராகிவிட்டார். ஆதலால் பழனிசாமியைச் சந்திக்க விருப்பமில்லையென்று ஒதுக்கி விட்டார். இனி அடுத்த குறி எடப்பாடி பழனிசாமியாகவும் இருக்கலாம்” என்றார்கள்.
ஊழல் கறைபடியாத, மக்களிடமும் செல்வாக்கு இருக்கிற ஆளாகப் பாருங்கள் என்று மோடி சொன்னதின் பெயரில் அதிமுகவில், பிஜேபிக்கு ஆப்டான அடுத்த ஆளைத் தேடும் படலம் ஆரம்பம் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக