சனி, 29 ஏப்ரல், 2017

சைதாபேட்டை . தாய் தங்கையை வெட்டி கொன்ற எஞ்சினியர் .. மன அழுத்தம் ,, தந்தை இறந்த சோகம் ..


balamurugan_17121  'தாயையும், தங்கையையும் ஏன் கொன்றேன்?'   - கைதான இன்ஜினீயர் சொல்லும் பரிதாப காரணம் balamurugan 17121சைதாப்பேட்டையில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான இன்ஜினீயர், தாயையும் தங்கையையும் ஏன் கொலை செய்தேன் என்று பரபரப்பான வாக்குமூலத்தை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அந்தக் காரணத்தை கேட்ட போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர். சென்னை, சைதாப்பேட்டை  கே.பி.கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் குடியிருந்தார் ஹேமலதா. இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் சண்முகம் ஏற்கெனவே இறந்து விட்டார். ஹேமலதாவுக்கு பாலமுருகன் என்ற மகனும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
இதில் பாலமுருகன் இன்ஜினீயரிங் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். ஜெயலட்சுமி, இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஹேமலதா வீடு நேற்று காலை முதல் திறக்கப்படவில்லை. இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சைதாப்பேட்டை போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் ஜெயலட்சுமியும் ஹேமலதாவும் பிணமாகக் கிடந்தனர்.
நகை, பணம் கொள்ளைப் போகவில்லை. கொடூரமாக இருவரையும் கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது, பாலமுருகன் மட்டும் மாயமாகியிருந்தார்.
இதனால், அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீஸார் தேடிவந்தநிலையில் இன்று அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார், கொலை குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அதிர்ச்சிகரமான தகவலை போலீஸாரிடம் தெரிவித்தார்.
பாலமுருகன்இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸார் கூறுகையில், “பாலமுருகனின் அப்பா சண்முகம், அரசுத்துறையில் பணியாற்றியவர்.
கடந்த ஆண்டு மே மாதம் அவர் திடீரென இறந்துவிட்டார். அப்பாவின் இறப்பு பாலமுருகனை பெரிதும் பாதித்தது. இதன்பிறகு அவர், யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்துவந்துள்ளார்.
இந்த சமயத்தில் அப்பாவின் ஓராண்டு நினைவு நாளை மே மாதம் நடத்த வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இது, பாலமுருகனின் மனநிலையை மேலும் பாதித்துள்ளது. இதனால், அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அப்போது, தானும் இறந்துவிட்டால் அம்மாவும், தங்கையும் அனாதையாகி விடுவார்கள் என்று கருதிய பாலமுருகன், அவர்களையும் அப்பா சென்ற இடத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்.
இதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாசாலையில் உள்ள மாலில் கத்தியை வாங்கி கொண்டு வீட்டில் வைத்துள்ளார். சம்பவத்தன்று, ஹேமலதாவும் ஜெயலட்சுமியும் தனித்தனியாக படுத்து உறங்கியுள்ளனர்.
இதுதான் சரியான தருணம் என்று கருதிய பாலமுருகன், முதலில் ஹேமலதாவின் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். பிறகு, ஜெயலட்சுமியை கொலை செய்துள்ளார்.
பின்னர் வீட்டை பூட்டிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள கடற்கரைக்குச் சென்றுள்ளார். அதிகாலை மூன்று மணியளவில் கடலில் தற்கொலை செய்ய முயன்றுள்ளார் பாலமுருகன். ஆனால், கடல் அலை அவரை வெளியே தள்ளியுள்ளது.
இதனால், கடற்கரை வழியாக மனம் போன போக்கில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரோந்து போலீஸார், பாலமுருகனிடம் விசாரித்துள்ளனர்.
அவர்களிடம் அம்மா, தங்கையை கொலை செய்த தகவலைத் தெரிவித்ததோடு, தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக விரக்தியுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாலமுருகனை நாங்கள் கைது செய்தோம்”என்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வழக்கில் பாலமுருகனும் தற்கொலை செய்திருந்தால் வழக்கில் விசாரணை கோணமே மாறியிருக்கும்.
பாலமுருகன், தான் வேலை பார்த்த அலுவலகத்தில், மதுரையில் உள்ள இடம் வில்லங்கத்தில் இருப்பதாகக் காரணம் சொல்லி அடிக்கடி விடுமுறை எடுத்துள்ளார். அதுதொடர்பாக நாங்கள் விசாரணை நடத்த தயாராக இருந்தோம். அதற்குள் பாலமுருகன் எங்களிடம் சிக்கி விட்டார்” என்றார்.
பாலமுருகனுடன் வேலைப்பார்த்தவர்கள் கூறுகையில், “பாலமுருகன், மருத்துவராகவே ஆசைப்பட்டார். ஆனால், அவரை வீட்டில் உள்ளவர்கள் பொறியியல் படிக்க வைத்துள்ளனர்.
இந்த மனவருத்தம் அவரிடம் இருந்தது. அதோடு அப்பா மீது அதிக பாசம் வைத்திருந்த பாலமுருகன், அவரது இறப்புக்குப் பிறகு முற்றிலும் மாறிவிட்டார். அலுவலகத்தில் கூட யாரிடமும் பேச மாட்டார்”என்றனர். webதுனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக