சனி, 1 ஏப்ரல், 2017

மக்களே நீங்கதான் ஏப்பிரல் பூல் !

Karthikeyan Fastura:   மாட்ரிக்ஸ் படம் பார்த்திருப்பீர்கள். 2199 ஆம் ஆண்டில் உயிரோடு இருக்கும் மனிதர்கள் 1999இல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதாவது அவர்கள் உடல்கள் அனைத்தும் ஒரு கேப்ஸ்யுலில் வயர்களால் இணைக்கப்பட்டு இருக்கும். மூளையானது ஒரு சூப்பர் கம்ப்யுட்டருடன் இணைக்கப்பட்டு பிறந்தது முதல் இறப்பு வரை ஒரு கற்பனை உலகத்தில் 1999இல் மட்டுமே வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். நிஜமானது அவர்களின் உடம்பு மின்சாரம் உற்பத்தியாகும் ஒரு பாட்டரி செல்லாக மட்டுமே பாவிக்கப்பட்டு சக்தி அனைத்தும் உறிஞ்சப்படும்.
இப்போது நாம் வாழ்க்கையும் அப்படிதான். நம்மை சுற்றி கண்ணுக்கு தெரியாத எண்ணற்ற வயர்கள் இணைக்கப்பட்டு நம் சக்தி அனைத்தும் உறிஞ்சப்படுகிறது. பால், காய்கறி, பெட்ரோல், பஸ் கட்டணம், பிள்ளைகளின் கல்வி கட்டணம், வருமானவரி , இன்ஸ்யுரன்ஸ், பேங்க் கட்டணங்கள், குண்டூசி முதல் வாங்கும் எல்லாப்பொருளிலும் நுகர்வோரிடம் உறிஞ்சப்படும் வரி, வாகன வரி, சுங்க வரி, Cashless Payment என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் பிடிக்கப்படும் வரி என்று நடுத்தர வர்க்கத்தையும், ஏழை வர்க்கத்தையும் மேலே எழும்பவே முடியாத அளவிற்கு எவ்வளவு உழைத்தும் உறிஞ்சுக்கொண்டே இருக்கும் அரசாங்கம் மறுபக்கம் பணம் படைத்தவர்களுக்கு விலக்கு மேல் விலக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
இந்த பொருளாதார சுரண்டலை மறைக்க மதவெறியையும், சாதிய ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து தினம் தினம் மக்களுக்கு ஒரு பிரச்சனையை கொடுத்துக்கொண்டே இருந்து நம்மை சிந்திக்க விடாமல் செய்வது தான் இன்றைய அரசாங்கம் என்னும் பொருளாதார அடியாள் செய்யும் வேலை. சாதி, மதம், இனம் என்னும் சிரங்கை சொரிந்து கொண்டே இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை சரியாக செய்து மக்களை நையப்புடைத்து சக்கையாக பிழிந்து அவர்களின் உழைப்பை உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதில் மக்கள் ஏமாறாத நாள் , ஏமாறாத கணம் என்று ஒன்று தனியே இருக்கிறதா.. நமக்கு எல்லா நாளும் ஏப்ரல் ஒன்னு தான். வாங்க கொண்டாடுவோம் ஏமாளிகளே..   முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக