புதன், 26 ஏப்ரல், 2017

அமெரிக்க ஏவுகணை கப்பல் தென்கொரியா வந்து அடைந்துள்ளது

வட கொரியாஇன்னொரு ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியவை வந்தடைந்துள்ளது. ஏவுகணைகள் பொருத்தப்பட்ட யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்சிக் கப்பல், காரல் வின்சன் விமானத்தினால் வழிநடத்தப்படும் போர்க்கப்பல் அணியோடு சேரவுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று நாட்டின் ராணுவம் நிறுவப்பட்ட 85வது ஆண்டு நினைவை வட கொரியா கொண்டாடுகிறது. இந்த நிகழ்வை பெருமளவில் குண்டுகள் முழங்க அந்நாடு கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக தென் கொரியா தெரிவித்திருக்கிறது. கொரிய தீபகற்பத்தைச் சூழும் கரிய போர் மேகங்கள் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே ஏற்பட்ட சொற்போரால் சமீபத்திய வாரங்களில் இந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது.


முன்பு கடைபிடித்துள்ள சில ஆண்டு நினைவு கொண்டாட்டங்களின்போது, அணு ஆயுத அல்லது ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளதால், அது மேலதிக சோதனைகளை நடத்தலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். படத்தின் காப்புரிமை Reuters "அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை "அமெரிக்க போர்கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்" இருப்பினும், தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம், "வழக்கத்துக்கு மாறான நிலைமைகள் எதையும் கண்டறியவில்லை" என்று தெரிவித்திருக்கிறது. மாறாக, வென்சான் நகரை சுற்றி வட கொரியா தாக்குதல் பயிற்சியை நடத்தியுள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது. "வட கொரிய ராணுவத்தின் நகர்வை எமது ராணுவம் நெருக்கமாக கண்காணித்து வருகிறது" என்று தென் கொரியா கூறியுள்ளது.

ஏப்ரல் 16 ஆம் தேதி வட கொரியா நடத்திய தோல்வியில் முடிந்த பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை, அதிபர் டொனால்ட் டிரம்பை சோதிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்க துணை அதிபர் மைக் பென்ஸை தூண்டியது. படத்தின் காப்புரிமை Reuters வழக்கத்திற்கு மாறான நிகழ்வாக, அமெரிக்க செனட் அவை உறுப்பினர்கள் அனைவரும் புதன்கிழமை நடைபெறும் வட கொரியா பற்றிய விளக்க கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவின் புசான் துறைமுகத்தை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இது இந்த கப்பலின் வழக்கமான பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை தயாரிப்பை மறைக்க வட கொரியா செயற்கை கோள் திட்டமா? `எங்களது பாணியில் அணு ஆயுத தாக்குதல் பதிலடி' - மிரட்டுகிறது வடகொரியா அணு ஆற்றலால் இயக்கப்படும் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் 154 டோமாஹாக் ஏவுகணைகளையும், 60 அதிரடி படைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகளையும் கொண்டு வந்துள்ளது என்று தென் கொரியாவின் சோசுக் இல்போ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. காரல் வின்சன் போர்க்கப்பல் அணியோடு ராணுவ பயிற்சியில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரல் வின்சன் போர்க்கப்பல் அணிதான், அந்த பிராந்தியத்தில் "தயார் நிலையை பராமரிக்க" இந்த மாதத்தின் தொடக்கத்தில் வட கொரியாவுக்கு அனுப்பப்படுவதாக அமெரிக்க தெரிவித்தது. அப்போது, அந்த பிராந்தியத்திற்கு கடற்படைத் தொகுதியை அனுப்புவதாகவும், அமெரிக்கா மிகவும் சக்தி வாய்ந்த, விமானந்தாங்கியை விட சக்தி மிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை கொண்டிருப்பதாகவும் அதிபர் டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவை மிரட்டும் வடகொரிய ஏவுகணைத் திட்டம் வட கொரியாவை சீனாவின் உதவி இல்லாமல் அமெரிக்கா தனியாக எதிர்க்கும்: டிரம்ப் தென் கொரியாவுக்கு வருகின்ற விமானந்தாங்கியை மூழ்கடித்து விடுவோம் என்றும், அமெரிக்காவின் தாக்குதல் என்று அது கூறுவதற்கு எதிராக, "முன்கூட்டியே மிகப் பெரிய தாக்குதலை" நடத்துவோம் என்றும் மிக கோபமாக வட கொரியா பதிலளித்துள்ளது. இருப்பினும், அமெரிக்க போர்க்கப்பல்கள் சில குழப்பங்களை விளைவித்தன.

இந்த அறிவிப்புக்கு பின்னர் வட கொரியாவை நெருங்கிச் செல்லாமல், எதிர்ப்புறமாக அது பயணித்ததால் கிண்டல்களுக்கு இரையானது. என்றாலும், ஆணையிட்டதைபோல அந்த பிராந்தியத்திற்கு இப்போது செல்வதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 வடகொரியாவுக்கு பதிலடி எப்படி?: தீவிர ஆலோசனையில் அமெரிக்கா - சீனா எங்கள் அணு சோதனையை நியாயப்படுத்துகிறது அமெரிக்காவின் சிரியா தாக்குதல்: வடகொரியா சீனா, வடகொரியாவின் ஒரேயொரு கூட்டாளியாகவும். முக்கிய வர்த்தக பங்கு வகிக்கின்ற நாடாகவும் விளங்குகிறது. வட கொரியாவுக்கு சீனா அழுத்தங்கள் வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. திங்கள்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசியுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டை பராமரிக்க வேண்டும் என்றும், பதற்றத்தை அதிகரிக்கும் செயல்பாடுகளை தணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். bbc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக