சனி, 22 ஏப்ரல், 2017

பெண்களை கேவலப்படுத்தும் மனுதர்ம சாஸ்திரங்கள் .. குரானின் வாசகங்கள்

இந்து மதமும் இஸ்லாமிய மதமும் பெண்களை கேவலப்படுத்துகின்றன என்ற விதத்தில் குரானின் வாசகங்கள் , மனுதர்மத்தின் வாசகங்கள் சாம்பிளுக்கு...
//I. 213 இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்தக் காரணத்த்திற்காகவே, விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்பொது உஷாராகயில்லாமல் ஒரு போதும் இருக்கமாட்டார்கள்.
II. 214 ஏனெனில், இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி , ஒரு கல்விமானையும் பாதை தவறிசெல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும் கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உள்ளவர்கள்.//- மனுதர்மம்
//பெண்கள் என்றாலே தீமைதான்; அதனிலும் மோசம் என்னவெனில் அவர்கள் தேவையான தீமை.
-- பெண்களிடம் எந்த அறிவுரையையும் கேட்காதீர்கள்; அவர்களைப் பிற ஆண்களின் கண்களிடமிருந்து ஒளித்து வையுங்கள். (
அவர்களோடு அதிக நேரம் செலவிடாதீர்கள். அவர்கள் உங்களைத் தாழ்த்தி விடுவார்கள்.
ஆண்களே, பெண்கள் சொல்வதைக் கேட்காதீர்கள்.

-- பெண்களுக்குக் கல்வி தருவது தீமையோடு கவலையைச் சேர்ப்பது போன்றது. (299)//-குரான்
இப்படிபட்ட போஸ்ட்ல உடனே ...
"முழுமையாக இஸ்லாத்தை படித்து தெரிந்து விட்டு எழுதுவது நல்லது........."ன்னு ஒரு பின்னூட்டம் போட்டுட வேண்டியது!!
முழுமையா இஸ்லாத்தை அல்லது இந்து தர்மங்களை படித்தால் மேலே சொல்லப்பட்ட விஷயங்களின் அர்த்தம் மாறிடுமா ?
தனி தனியா சொன்னாலும் பெண்களை இத்தனை கேவலமா சொல்கிறது எனில் அவற்றை போற்ற வேண்டிய அவசியமென்ன ?
குரானாகட்டும் புராண மனுதர்ம புரட்டுகளாகட்டும் தவறானவைன்னு தெரிந்த பின்னும் அவற்றை புனித நூலாக கொண்டாடுவதோ பின்பற்றுவதோ எப்படி சரியானதுன்னு விளக்குங்க, விளங்கிக்குறோம் !
அதை விட்டுட்டு மதம்ன்னு தூக்கிவச்சு கொண்டாடும் உங்க போதைக்கு பலிகடாவாகனுமா பெண்கள் ?
என்ன நியாயம் ? ஆணை எந்த மதமும் இப்படி கேவலப்படுத்தி அடிமை படுத்தலையே ?
உங்க கடவுளுக்கும் மதத்துக்கும் ஏன் இத்தனை ஓரவஞ்சனை ??  முகநூல் பதிவு  மீனா சோமு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக