செவ்வாய், 25 ஏப்ரல், 2017

ஸ்டாலின் : மோடி அரசு விவசாயிகளின் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையாவது செயல்படுத்தியதா?

தமிழகத்தில் 25 ம் தேதி நடக்கவிருக்கும் போராட்டம் 100 சதவீதம் வெற்றிபெருமென பேசினார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வளியுறுத்தி 25 ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக தலைமையின் கீழ் பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இனைந்து போராட்டம் நடத்த இருக்கின்றனர். அது குறித்து விளக்குவதற்கான பொதுகூட்டத்தை கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் 23ம் தேதி இரவு நடத்தியது தஞ்சை வடக்கு மாவட்ட திமுக. அதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னாள் அமைச்சர்கள்,  சிட்டிங் எம்,எல்,ஏ க்கள், மாசெக்கள் என டெல்டா மாவட்ட திமுகவின் பெரும் படையே கூடியிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் என பல்வேறு கட்சியின் மாவட்ட பிரதிநிதிகளை கூட்டத்திற்கு அழைப்பு கொடுத்திருந்தனர். திமுகவினர். அதனை ஏற்று அனைத்துக்கட்சியினரும் வந்திருந்தனர். காலை  8.30 மணிக்கு காரில்  சென்னையில் இருந்து புறப்பட்ட ஸ்டாலின் தஞ்சை மாவட்ட எல்லையான அனைக்கரைக்கு மதியம் சரியாக 1 மணிக்கு வந்தார். அவரை வரவேற்பதற்காக திமுக திருவாரூர், நாகை, காரைக்கால், தஞ்சாவூர் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் கூடியிருந்தனர்.
ஸ்டாலின் வந்ததும் அவருக்கு வரவேற்பு கொடுத்து அழைத்து சென்றனர். சில மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொண்ட ஸ்டாலின் சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு ஏதாவது ஒரு நூலகத்திற்கு புத்தகம் வழங்கவேண்டும் என கூறியிருந்தார் அதன் படி தனது பிறந்த நாளில் கிடைத்த அத்தனை நூல்களையும் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் இருக்கும் கோபாலராவ் பொது நூலகத்திற்கு கொடுத்து வருகை பதிவேட்டில் கையோப்பமிட்டுவிட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அனைத்து திமுகவினரும் இது ஒரு நல்ல கூட்டணி இது தொடரவேண்டும் என்றே பேசினர்.

முன்னாள் மத்திய அமைச்சர்  டி,ஆர்,பாலு பேசுகையில்,  ஒ,பி,எஸ், இ,பி,எஸ், விகேஎஸ் என  பல எஸ்கள் தமிழகத்தை குட்டிச்சுவராக மாற்றிக்கொண்டிருக்கின்றனர். அதில் இருந்து காப்பாற்ற ஒரு எம்,கே,எஸ்இருக்கிறார் என ரைமிங்காக பேசினார்.

இறுதியாக  திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ’’விவசாயிகளின் துயர் துடைக்க மறுக்கிறது மத்திய மாநில அரசுகள். கடந்த 16 ம் தேதி எதிர்கட்சிகள், விவசாய சங்கங்களை கூட்டி பல்வேறு தீர்மானங்களை நிரைவேற்றி அதனை விளக்கி சென்னை மாங்கொள்ளையில் பொதுக்கூட்டத்தையும் நடத்தியுள்ளோம். அந்த தீர்மானத்தில் முதல் தீர்மானமே வரட்சியால் தமிழகத்தில் இறந்து போன 400 க்கும் அதிகமான விவசாயிகளுக்கு இறங்கள் தெரிவித்துள்ளோம். அதன் படி அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசயசங்க தலைவர்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை அழைத்து சென்று பிரதமர் மோடியை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றினோம், அதன் படி எதிர்கட்சி தலைவர் என்கிற முறையில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதிக்காத்திருக்கிறோம்.

அதற்கான எந்த பதிலும் இதுவரைக்கிடைக்கவில்லை. டெல்லியில் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 40 நாட்களாக பிச்சை எடுக்கும் போரட்டத்தில் துவங்கி கடைசியாக சிறுநீரைக்குடிக்கும் போராட்டம் வரை நடத்திவிட்டனர். அவர்களை பல்வேறு மாநில விவசயிகளும், அரசியல் தலைவர்களும் சந்தித்து ஆதரவு கொடுத்தனர். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ அதை பற்றி பேசவே தயக்கம காட்டினார்.

திமுக விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக அனைத்துக்கட்சிகளையும் கூட்டி 25 ம்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என அறிவித்தது, அதில் டெல்லியில் போராடும் விவசாயிகளும் கலந்து கொள்ளவேண்டும் என அவர்களுக்கு தீர்மான நகல் அனுப்பியிருந்தோம், அதனை ஏற்று போராட்டத்தை சிறிது காலம் ஒத்திவைத்துவிட்டு தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வோம் என முடிவெடுத்திருந்தனர்.
அதற்கு கலங்கம் விளைவிக்கும் அத்தனை வேளைகளையும் அதிமுக செய்தது. அது நடக்கவில்லை. அரசு பயனமாக சென்ற தமிழக முதல்வர் ஒப்புக்கு சப்பாக விவசாயிகளை சந்தித்திருக்கிறார். அப்பொது விவசாயிகள் முதல்வரிடம் இரண்டு நிமிடம் பிரதமரிடம் பேச நேரம் வாங்கிகொடுங்கள் என்றே கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு மோடி அரசு விவசாயிகளின் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையாவது செயல்படுத்தியிருக்காரா , காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு 7 மாதங்கள் ஆகிவிட்டன, வரட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து 4 மாதங்கள் ஆகிவிட்டன,  வரச்சியால் இறந்த விவசாயிகளுக்கு நிவாரனம் வழங்கப்படும் என கூறி 4 மாதங்கள் ஆகிவிட்டது. 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர் அதை தமிழக அரசு வேடிக்கை மட்டிமே பார்த்தது.

அதிமுக ஆட்சியி எப்போதாவது மேட்டூர் அனை சரியான நேரத்தில் திறக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. அண்டை மாநிலத்தில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரை கிடைக்கவிடாமல் செய்ய அனைகள் அங்காங்கே கட்டுகின்றனர் அதனை தடுக்க வக்கில்லை. வர்தா புயல், வறட்சி நிவாரனம் வாங்கிக்கொடுக்க திரான்யில்லாத அரசாகவே இருக்கிறது ஆளும் அதிமுக அரசு. அனால் விவசாயிகளின் பிரச்சினையை பற்றி பேச திமுகவிற்கு தகுதியில்லை என்கிறார்கள்.

யாருக்கு த குதியில்லை, முன்னாள் முதல்வர் ஒ,பண்ணீர் செல்வம் வரச்சி நிதியாக ஏக்கருக்கு 5420 ரூபாய் வழங்கப்படும்னு சொன்னார் கொடுக்கவில்லை.  1957 ம் ஆண்டு முதன் முதலில் வெற்றிபெற்றதும் சட்டசபையில் கண்ணிப்பேச்சாக பேசிய முதல் பேச்சே விவசாயிகள் பிரச்சினை பற்றித்தான் பேசினார். மின்கட்டனத்தை இலவசமாக்கியது, விவசாயக்கடன் 7 ஆயிறம் கோடி தள்ளுபடி செய்தது, இலவச மின்மோட்டார் வழங்கியது உள்ளிட்ட திமுகவின் சாதனைகள் அத்தனையையும் பட்டியல் இட்டார். போராட்டம் வெற்றியடையை உங்களின் ஒத்துழைப்பு வேண்டு என்று பேசிமுடித்தார்.">-க.செல்வகுமார்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக