வெள்ளி, 28 ஏப்ரல், 2017

கீழடியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ! தமிழர் வரலாற்றை குழிதோண்டி புதைக்க நிர்மலா சீதாராமன் RSS...

பாதியில் நிறுத்தம் சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடும் எதிர்ப்பை பொதுமக்களும் மக்கள்தேசம் அமைப்பினர் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம
Amudhavalli : மதுரை: கீழடியில் நடைபெற்ற அகழாய்வை பாதியில் நிறுத்தியதற்கும், அதன் தலைவராக பணியாற்றிய அமர்நாத்தை அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து மக்கள் தேசம் அமைப்பினர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3ம் கட்ட ஆய்வு மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு இந்த ஆராய்ச்சியை பாதியிலேயே நிறுத்தியது. இதனை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்த்தனர். இதனிடையே, மதுரை அருகே கீழடியில் புதைந்திருந்த தமிழர் நாகரீகத்தை வெளிக் கொண்டு வந்த புகழ்மிக்க பணியின் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் 3ம் கட்ட ஆய்விற்கான நிதி கேட்டு மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார்.





இடமாற்றம்

இடமாற்றம்

இந்நிலையில், கீழடி தொல்லியல் ஆய்வுகளுக்கு தலைமையேற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மத்திய அரசு தனது புதிய கொள்கை முடிவுகளைக் காரணம் காட்டி இந்த பணியிட மாற்றத்தை நிகழ்த்தியது.





ஆய்வில் தொய்வு

ஆய்வில் தொய்வு

அதிகாரியின் அதிரடி மாற்றத்தால் கீழடி அகழ்வாய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று பிரியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.





எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்நிலையில், கீழடியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வந்தனர். அவர்களை அந்த இடத்திற்கு நுழைய விடாமல் தமிழ் தேசம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.





திரும்பிப் போ
தகராறு

தகராறு

இதனால் பாஜகவினருக்கும், பொதுமக்களுக்கும், தமிழ் தேசம் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு தகராறு ஏற்பட்டது. இதனால் ஒரு பதற்றமான சூழல் அங்கு உருவானது.





திரும்பிப் போ

தமிழ் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கு எதிராக செயல்படும் மத்திய அமைச்சர்களே திரும்பிப் போங்கள் என்று எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் கீழடியை பார்க்க முடியாமல் மத்திய அமைச்சர்களும், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் திரும்பினார்கள்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக