ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

விஜயகாந்துக்கு உறவினர்களின் உறுப்பு மாற்ற சிகிச்சை உதவி தேவையாம் ... பிரேமலதா மீது கோபத்தில் உறவினர்கள்?

இப்பதாய்ன் எங்களை கண்ணுக்கு தெரியறதா ?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்துக்கு சில மருத்துவ ரீதியான உதவிகளை உறவினர்கள் செய்ய மறுத்து வருகிறார்களாம். By: Prabha சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ ரீதியாக சில உதவிகளை ரத்த உறவுகள் செய்ய மறுத்துவருவதால் அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் அண்மையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சை பல நாட்களாக நீடித்தது. இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். ஒருநாள் மட்டுமே விஜயகாந்த் பிரசாரம் செய்த நிலையில் இடைத்தேர்தலே ஆர்கே நகரில் ரத்து செய்யப்பட்டது.

இந்த அறிவிப்புக்குப் பின்னர் மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது விஜயகாந்தின் ரத்த உறவுகளிடம் மருத்துவ ரீதியாக சில உதவிகளை பிரேமலதா உள்ளிட்டோர் கேட்டிருந்தனராம். ஆனால் விஜயகாந்த் செல்வாக்குடன் இருந்த காலத்தில் எங்கள் பக்கமே எட்டிப்பார்க்கவிடமால் வைத்திருந்துவிட்டு இப்போது வந்து வாசல் கதவை தட்டுவதா? என கோபத்தில் இருக்கின்றனராம் ரத்த உறவுகள். இதில் கலங்கிப் போனதாம் விஜயகாந்த் குடும்பம். இருப்பினும் விடா முயற்சியாக ரத்த உறவுகளின் ஒத்துழைப்பைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறதாம் விஜயகாந்த் குடும்பம். இதனைத் தொடர்ந்து வெளிநாடு ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்கின்றன தேமுதிக வட்டாரங்கள்  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக