திங்கள், 10 ஏப்ரல், 2017

துணைவேந்தர் கீதாலட்சுமி வருமானவரி அலுவலகத்தில் நேரில் வர மறுப்பு .. உயர்நீதிமன்றத்தில் மனு ..

விஜயபாஸ்கர், சரத்குமார்,ராஜேந்திரன் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகியும்,  தான் ஆஜர் ஆகாமல் சம்மனை எதிர்த்து கீதாலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார்.கடந்த 7ம் தேதி, சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களிலும், நடிகர் சரத்குமாரின் வீடு, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வீடு, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில்  சோதனை நடத்தினர்.<>சோதனையில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இது குறித்து வருமான வரித்துறை சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதையடுத்து, இவர்கள் அனைவரும் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரைத் தொடர்ந்து எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.

இவர்களைத் தொடர்ந்து சமக தலைவரும் நடிகருமான சரத்குமார் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.ஆனால், துணை வேந்தர் கீதாலட்சுமி கீதாலட்சுமி மட்டும் ஆஜர் ஆகவில்லை.  வருமான வரித்துறை சம்மனை எதிர்த்து துணை வேந்தர் கீதாலட்சுமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வருமானவரித்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் கீதாலட்சுமி மனுதாக்கல் செய்துள்ளார். விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப வருமானவரித்துறைக்கு அதிகாரமில்லை என்று அவர் மனுவில் தெரிவித்துள்ளார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக